செவ்வாய், 29 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (8)(வீரமங்கை ராணி துர்காவதி)

நர்மதை பெற்ற நகர் (8)

நர்மதை பெற்ற நகர் (8)(வீரமங்கை ராணி துர்காவதி)


 வீர மங்கை ராணி துர்காவதி 
போரில் மட்டுமல்ல நிர்வாகத்திலும் மட்டுமல்ல 
,புலவர்களை ஆதரிப்பதிலும் அவளுக்கு
 யாரும் நிகரில்லை என விளங்கினாள் 

அவளது அரசவையை கோக்மகாபாத்ரர்
,நர்வர்   முதலிய கவிஞர்கள்  அலங்கரித்தனர். 


ஒரு கவிதையால் மனம்  கவரப்பட்ட 
இந்த ராணி அந்த கவிதையை இயற்றிய கோக்மகாபாத்ரர் என்ற கவிஞருக்கு ஒரு கோடி  ரூபாய் பரிசு அளித்தாளாம் .!சுமார் 15 ஆண்டுகள் கோண்ட்வானா என்ற 
இந்த பிராந்தியத்தை ஆண்டுவந்த துர்காவதி மீது 
பொறாமை கொண்டார் டில்லி பாதுஷா அக்பர் சக்ரவர்த்தி. 

நூல் நூற்கத்தான்  பெண்கள் லாயக்கு 
தகுதி உடையவர்கள், அரசாள தகுதியற்றவர்கள் 
என்ற கருத்து அவருக்கு. அரசியை ஏளனம் 
செய்யும் வகையில்  ஒரு தங்கத்தால் செய்த 
கைராட்டை ஒன்றை அனுப்பிவைத்தாராம். 


களம் பல கண்ட இந்த வீரப் பெண்மணி 
இதைக் கண்டு அஞ்சவும் இல்லை 
,மனம் தளரவும் இல்லை 

துப்பாக்கி ஏந்தும் தன் இரு கரங்கள் 
துர்பாக்கியவசத்தால் இராட்டையில் நூல்
நூற்க முற்ப்பட நேரிடின் அச்சமயம் நூலுக்கு
 வேண்டிய பஞ்சை அடித்துக் கொடுக்கும் 
முதல் கூலியாளாக அந்த அக்பர்தான் 
இருக்கமுடியும்  என்ற கருத்தில் 
தங்கத்தினால் பஞ்சு அடிக்கும் வில்
 ஒன்றைத் தயாரித்து  அக்பர் சக்ரவர்த்திக்கு 
அனுப்பிவைத்தாளாம் என்னே அவள் நெஞ்சுறுதி!
என்னே அவள் வீரம்!

இப்படிப்பட்ட வீர பெண்மணிகள் 
வாழ்ந்த நாட்டில் பெண்கள் கோழைகளாக, 
ஆண்களின் போகப்பொருளாக, 
நெஞ்சில் உரமின்றி தன்னைக் கூட 
பாதுகாத்துக்கொள்ள தகுதியற்ற நிலைக்கு 
தள்ளப்பட்டு விட்டதை நினைத்தால்
 மிகவும் வருத்தமாக உள்ளது

.புராணங்களில் பல கொடிய அசுரர்களை 
கொன்று குவித்த நம் தெய்வங்கள் பல
 பெண் தெய்வங்களே.

மேலை நாட்டு நுகர்வோர் கலாச்சாரத்தை 
பின்பற்றிஅதற்க்கு அடிமையாகி  நம் நாட்டு வீர மரபுகளை 
அறிந்துகொள்ளாமல் போனதால் 
வந்ததுதான் இந்த கேடு. 

இன்று எதற்கெடுத்தாலும் ஊடகங்களை நம்பி 
பெண்கள்  அசிங்கப்பட்டுகொண்டு 
இருப்பதைப் பார்த்தால்
வேதனையாக உள்ளது. 

ஊடகங்கள் அவர்களின் அந்தரங்க பிரச்சினைகளை விளம்பரம் செய்து காசு பார்ப்பதில்தான் குறியாக உள்ளன. அவர்களை சகோதரிகளாக, அன்னையாக ,ஏன் ஒரு மனித உயிராகக் கூட மதிக்கசமூகத்தில் உள்ள மக்களின் மனதில் நல்ல  சிந்தனைகளை ஊக்குவிக்கும் விதத்தில் செயல்படாமல் உள்ளது மிகவும் வருந்தத்தக்க விஷயம். 

அடுத்து என்ன நடந்தது ?

(இன்னும் வரும்)

2 கருத்துகள்: