சனி, 19 அக்டோபர், 2013

வினோபா அடிகள்(பகுதி -4)

வினோபா அடிகள்(பகுதி -4)


காந்தியடிகளின் பேச்சில் மயங்கிய
வினோபா அடிகள்
அவருக்கு கடிதம் எழுதினர்.

காந்தியடிகள் அவருக்கு
பதில் கடிதம் எழுதினர்.

இக்காலத்தில் பெறப்படும்
கடிதங்களுக்கு பதில் அனுப்பும் 
உயர்ந்த பண்பு யாருக்கேனும் உண்டா
என்பது கேள்விக்குறியே!

நேரில் சந்தித்து மனு
கொடுத்தால் குப்பைக்
கூடைக்கு  போய்விடும்.

நேரில் பேச முயன்றால் தொலை பேசி
இணைப்பு கிடைக்காது.
இது இக்கால தலைவர்களின்
(அவ) லட்சணம்)

பல கடிதப் போக்குவரத்திற்குப் பின்
ஒருநாள் வினோபா சபர்மதி
ஆஸ்ரமதிற்கு சென்றார்.
அடிகளைக் கண்டார்.



வினோபாவின் தத்துவ ஞானமும்
ஆன்மீக சாதனையும் காந்திஜியை
மிகவும் கவர்ந்தன

அப்போது அவர் விநோபாவை
அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.



அப்போது அவர் கூறியதாவது
" எல்லோரும் ஆசி பெறுவதற்காக ஆசிரமம் வருகின்றார்கள்.
ஆனால் விநோபாவோ ஆசிரமத்தை
ஆசீர்வதிக்க வந்துள்ளார்" என்று.

1940 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
வினோபா திடீரென்று புகழ் பெற்றார்

காந்தியடிகள் வினோபாவை
முதல் சத்தியாக்ரகி
என்று நாட்டு மக்களுக்கு



அறிமுகம் செய்து வைத்தார்.
இரண்டாவது
சத்தியாக்ரகி  நேரு அவர்கள்.

காந்திஜி விநோபாவை அறிமுகம்
செய்யும்போது அவரின் சிறப்புகளை
விவரித்து பாராட்டினார்.

அந்த சிறப்புகள் என்ன ?
நாளை பார்ப்போம்
 
pic.courtesy-google images.

1 கருத்து: