வெள்ளி, 18 அக்டோபர், 2013

வினோபா அடிகள்(பகுதி -3)

வினோபா அடிகள்(பகுதி -3)


வினோபா அடிகள்(பகுதி-3




தோளுக்கு மேல் வளர்ந்தால் 
தன்  மகன் தோழன் என்று 
நமது பழமொழி சொல்கிறது.

ஆனால் எத்தனைபேர் இந்த 
உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள். 

ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. 
ஆனால் எதிர்க்கும் தன் மகளை அல்லது 
மகளை வீட்டை விட்டு துரத்திவிடுகிரார்கள் .சிலர்.

ஒரு சிலரோ தன் போலி கௌரவத்திற்காக  
இந்த உலகத்தை விட்டே அவர்களை 
அனுப்பிவிடுகிறார்கள். 

பாசம் இருக்கிறதே ஒழிய 
நேசம் இருப்பதில்லை. 

பாசம் கண்மூடித்தனமாக 
செயல்படுகிறது. 

து.  இரு பாலாரையும் ஒருசேர 
மீண்டு வரமுடியாத 
பள்ளத்தில்தள்ளிவிடுகிறது.

ஒருவரைஒருவர் கலந்து உட்கார்ந்து 
பொறுமையாக எந்த உணர்ச்சியை தூண்டும்
பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள யாரும் 
முற்படுவதில்லை. 

ஏனென்றால் இருவர் மனதிலும் 
அவநம்பிக்கையே நிலவுகிறது. 

பெற்றோர் இவர்கள் நம் வழிக்கு
வரமாட்டார்கள் என்று முடிவு 
கட்டிவிடுகிறார்கள்

பெற்றவர்கள் நம் மனதின் 
எண்ணங்களை கேட்கமாட்டார்கள் என்று
அவர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள் 

நாமாகவே ஏதாவது ஒரு முடிவு 
எடுத்துவிடவேண்டும் என்ற நிலைக்கு 
அவர்களை தள்ளிவிடுகிறது.அந்த எண்ணம்  

அவ்வாறு செய்வதில் உள்ள ஆபத்துகளை 
அவர்கள் உணரும் தெளிவான மன நிலையும் 
அனுபவங்களும்  அவர்களுக்கு 
இல்லையாததால் அவைகள் 
பெரும்பாலும் தோல்வியையும்  
அழிவையுமே பரிசாக 
அவர்களுக்கு அளிக்கின்றன. 

இருவரும் அகந்தையை விட்டுவிட்டு
மனம் திறந்து பேசினால் இன்றைய
சமூகத்தில் பல பிரச்சினைகள் தீரும். 

ஆனால் அதற்குதான் யாரும் தயாராக 
இல்லை என்பது வேதனைக்குரிய விஷயம். 

தந்தை சொல்லில் மட்டுமல்லாமல் 
செயலிலும் தன்  மகன் வினோபாவை 
தோழனாக நடத்தினார். 

தாயாருக்கோ தன் மகன் 
ஒருபோதும் தவறு செய்யமாட்டான்
 என்ற நம்பிக்கை. 

பாருங்கள்! கேட்கவே 
இன்பமாக உள்ளது. 

இதுபோன்ற நம்பிக்கை 
ஒவ்வொரு குடும்பத்திலும்  வளரவேண்டும். 
அதற்கு அனைவரும் ஒழுக்கமான 
ஒழுங்கான வாழ்க்கை வாழவேண்டும். 
போலியான வாழ்க்கை வாழக்கூடாது 

வினோபா காந்தியடிகளை 
முதன்முதலாக பார்த்தது காசியில் 
இந்து பல்கலைக்கழக விழாவில்.

 அப்போது காந்தியடிகள் 
புரட்சிகரமாகப் பேசினார். 
அந்த பேச்சு வினோபாவை மிக கவர்ந்தது. 



அதன் பிறகு என்ன நடந்தது? 

(இன்னும் வரும்)

pic. courtesy google images 

2 கருத்துகள்:

  1. அவநம்பிக்கையே இருக்கக் கூடாது... நீங்கள் சொன்ன நம்பிக்கை படிக்கவே சந்தோசம் ஐயா...

    பிறகு என்ன நடந்தது...? அறிய ஆவலுடன்...

    பதிலளிநீக்கு