திங்கள், 14 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (3)

நர்மதை பெற்ற நகர் (3)

நர்மதை பெற்ற நகர் (3)





அந்த தாய் உண்மையைக் கூற
முடிவு செய்தவுடன்
அந்த உண்மையைக் கேட்பவர்கள்  மட்டும்
நடந்த சம்பவங்களின் தன்மையை
புரிந்துகொள்வார்கள்.

 சிறுவனுக்கோ ஒன்றும் புரியாது.
ஏனென்றால் அவனுக்கு அதை
புரிந்துகொள்ளுவதர்க்கான
வயதோ அறிவோ கிடையாது.

அவன் சொன்னதை சொல்லுமாம்
கிளிப்பிள்ளை என்ற நிலையில் இருந்தான்.

அவள் கூறினாள்.. மகனே! நான் சொல்லப்போவதை  
அப்படியே உன் குருவிடம் கூறு.

என் இளமையில் பல ஆண்டுகளுக்கு
பல செல்வ  சீமான்களின் வீடுகளில்
 பணிவிடை செய்துள்ளேன் .
(ஆனால்  அந்த தாய் மீது அவர்களால்
நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்  கொடுமைகளை
சம்பந்தப்பட்ட யாரையும் காட்டிக் கொடுக்காமல்
வெளிப்படுத்துகிறாள் என்பது கவனிக்கத்தக்கது).

ஆனால் அவர்களைப் பற்றியோ அல்லது
அவர்கள் குலங்கள்  பற்றியோ நான்
தெரிந்துகொள்ள முற்ப்பட்டதில்லை
அவர்களில் நீ யாருடைய மகன் என்பது
எனக்கே தெரியாததாகும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பும்
நம் நாட்டில்  பெண்களுக்கு
பாதுகாப்பில்லை என்பதும்,
நாகரீகம் ,கல்வியறிவு ,சட்டங்கள் உள்ள
தற்காலத்திலும்  அதே நிலைமை நிலவுகிறது
என்றால் பெண்கள் மீதான ஆண்களின் பார்வை
சிறிதளவும்  மாறவில்லை என்பதையே காட்டுகிறது.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
அவனுக்கு குருவின் கேள்விக்கு
பதில் கிடைத்துவிட்டது.

அதை குருவிடம் சொன்னால்
என்ன நடக்கும்
என்று அவனுக்கு தெரியாது.

மற்றவர்கள் அதை தெரிந்துகொண்டால்
அவன் எவ்வளவு கேவலமாக மதிக்கப்படுவான்
என்றும் அந்த இளம் பாலகனுக்கு
தெரியாத கள்ளமில்லா உள்ளம் .

அவன் ஒருவாறு சமாதானம் அடைந்து
அடுத்த நாள் குருகுலம் சென்று தன் தயார்
தன்னிடம்  கூறியதை ஒரு வரி விடாமல்
அப்படியே தன்  குருநாதரான மகரிஷியிடம்
வகுப்பில் கூறினான்.

அப்புறம் என்ன நடந்தது

(நாளை வரும்)

pic. courtesy-google images 

1 கருத்து:

  1. கள்ளமில்லா உள்ளத்திற்கு என்ன தெரியும்... ஆவலுடன் அறிய காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு