செவ்வாய், 1 அக்டோபர், 2013

லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

எனக்கும் இன்று பிறந்த நாள் (2.10.2013)


ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 


இவர்தான் லால் பகதூர் சாஸ்திரி 

உருவத்தால் சிறியவர்
உள்ளத்தால் உயர்ந்தவர்

பாகிஸ்தான் படையெடுப்பின்போது
நம் நாட்டின் வீரர்களையும் 
மக்களையும் தட்டிஎழுப்பி 
நாட்டை காத்தவர் 

ஜெய் ஜவான் 
ஜெய் கிசான் என்ற 
தாரக மந்திரத்தை  தந்தவர் 

உயர் பதவி வகித்தாலும் 
எளிமையின் சின்னமாய்
வாழ்ந்தவர் 

சமாதானத்தின் தூதுவராய்
தாஷ்கண்ட் சென்றவரை 
இறைவனின் தூதர்கள் 
தங்கள் நாட்டிற்கு அழைத்து 
சென்று விட்டனர் 

சுயனலமற்றவர்
என்றும் மற்றவர்
நலம் விரும்பியவர் 

லால் பகதூர் சாஸ்த்ரியின் 
வாழ்க்கை மிகவும் துன்பமயமானது
அவரின் அப்பழுக்கற்ற நேர்மையும்,
எளிமையும்,தியாகமும் 
இக்கால மக்களுக்கு போய் சேரவில்லை.
என்ன செய்வது ?

இங்கு இருப்பவர்களுக்கு 
உள் நாட்டில் இருக்கும் 
வைரங்களின் மதிப்பு தெரிவதில்லை 


கூழாங் கற்களை வைரம் என்று நம்பி 
தலைமேல் வைத்துகொண்டு 
கொண்டாடி திண்டாடுகிறார்கள்  

வாழ்க என்றும் உன் புகழ் 

2 கருத்துகள்:

 1. அருமை... உண்மை ஐயா...

  தலைப்பே பலவற்றை சொல்கிறது... (பலருக்கும் தெரியாது என்பதும் உண்மை...)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியாதவற்றை தெரியவைப்பதும்
   தெளியாதவற்றை தெளிவுபடுத்தும்
   முயற்சியைத்தான் இவன் அயர்ச்சியில்லாது
   செய்து கொண்டிருக்கிறான்
   நன்றி DD

   நீக்கு