சனி, 12 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (2)

நர்மதை பெற்ற நகர் (2)

நர்மதை பெற்ற நகர் (2)




உண்மை பேசுவதையே
 உயிர் மூச்சாகக் கொண்டு அதற்காக
தன்  நாடு, அரச பதவி  ,அரச  போக வாழ்வு
,மனைவி,மக்கள் அனைத்தையுமே தியாகம்
 செய்த ஹரிச்சந்திரன் வாழ்ந்த
நாடு அல்லவா நம் நாடு.

ஒவ்வொரு தனி மனிதர்கள் கூட
 இந்த நெறியை கடைப்பிடித்து
உண்மை நெறியின் மாண்பை உலகிற்கு
உணர்த்திய சம்பவங்கள் இந்த நாட்டில்
அவ்வப்போது நடைபெறுவது கண்கூடு.

ஹரிச்சந்திரன் கதையைக் கேட்டு,
அந்த நாடகத்தைப் பார்த்து தன்
வாழ்க்கையையே சத்தியத்திற்காக
 தியாகம் செய்த மகாத்மா காந்தியடிகளை
இந்த உலகம் மறந்துபோய்விட்டது.

அவர் சத்தியத்தைப் பேணுவதற்காக
அரசன் ஹரிச்சந்திரன் பட்ட துன்பங்கள் அளவிற்கு
 அவரும் எதிர்கொண்டதை அவர் எழுதியுள்ள
சத்திய சோதனை என்ற நூலை படித்தவர்கள் உணருவர்.

உண்மையைப் பேசுவதற்கு
மன உறுதி வேண்டும்.

அதனால் ஏற்படப்போகும் விளைவுகளை
 எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.

 எந்த நிலையிலும் வெளியிட்ட உண்மையை
 மீண்டும் திரும்பப் பெறும்  இக்கால
அரசியல்வாதிகளைப்போலோ ,
தவறை செய்துவிட்டு நீதிமன்றத்தில்
தான் தவறே செய்யவில்லை என்று
பொய் சாட்சி  கூறும் மனசாட்சியற்ற
கேவலமான இக்கால மனிதர்களைப்
போல் இருக்ககூடாது.

 மேலும் உண்மையை வெளியிடும்போது
அதில் சம்பந்தப்பட்ட மனிதர்களை
அது எந்த வகையிலும் பாதிப்பை
 ஏற்படுத்தக்கூடாது.

அப்படிப்பட்ட மனஉறுதி
கொண்ட ,வீரப்பெண் அவள் .

தன்னுடைய வாழ்வைக் கெடுத்தவர்களின்
பெயர்களை அவள் எந்த தருணத்திலும் வெளியிடவில்லை .

அதை வெளியிட்டு அவர்களின் வாழ்வை
அவள் கெடுக்க விரும்பவில்லை.

எப்பேர்ப்பட்ட உத்தம குணம்
கொணடவள் அந்த தாய்.


அதனால்தான் பெண்ணிற்
பெருந்தக்க யாவுள என்றார்களோ?

மகனே !

நான் சொல்லபோவதை
அப்படியே உன் குருவிடம் கூறு என்றாள் .

அப்படி அவள் என்ன கூறினாள் ?

நாளை வரும்..

1 கருத்து: