வெள்ளி, 11 அக்டோபர், 2013

நர்மதை பெற்ற நகர் (1)

நர்மதை பெற்ற நகர் (1)



அம்மா! என் தந்தை எங்கே?

அவரை நான் ஏன்
பார்க்க முடிவதில்லை ?

அவர் பெயர் என்ன?
என்று ஐந்து  வயது பாலகன் ஒருவன்
தன்  தாயைப் பார்த்து மேற்கண்ட
கேள்வியைக் கேட்டான்.

இந்த சம்பவம் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன் நடந்தது.

மகன் கேட்ட இந்த கேள்வி
அவனின் தாய்க்கு அதிர்ச்சியை தந்தது

அவள் கோபப்படவில்லை.
மாறாக அந்த சிறுவனிடம்
"கண்ணே" இந்த கேள்வியை
 நீ எதற்காகக் கேட்கிறாய்?
என்று பதட்டத்துடன் வினவினாள்

மேலும் இவ்வளவு நாட்களாக இல்லாமல்
இப்போது மட்டும் உனக்கு என்ன அவசியம்
அதற்க்கு வந்தது என்று கேட்டாள் .

அந்நாளில் குருகுலம் சென்றுதான்
கல்வி கற்கவேண்டும்.
ஐந்து  வயதாகிய குழந்தையை தாய்
குருகுலத்திற்கு கல்வி
கற்க அனுப்பி வைத்தாள் .

முதன்முதலாக குருகுலம் சென்ற
சிறுவனைப் பார்த்து அனைவர் முன்னிலையிலும்
குருநாதன் சிறுவனின் தந்தையின் பெயரைக் கேட்டார்.

நான் தெரியாது என்று சொன்னவுடன்
குருகுலத்தில் இருந்த மற்ற பையன்கள்
அனைவரும் கொல்லென்று சிரித்தார்கள்.
என்று தாயிடம் குழந்தை சொன்னான்.

அம்மா எனக்கு
அவமானமாய்ப் போய்விட்டது .

அப்பா இல்லாவிட்டாலும் பரவாயில்லை .
அவரது பெயரையாவது சொல்லேன் ,

ஏனெனில் நாளை குருகுலம் போனால்
குருநாதர் மீண்டும் அந்த கேள்வியை கேட்டால்
நான் என்ன பதில் சொல்வேன் என்றான் குழந்தை

உண்மையை எப்படி விளக்கி
அந்த சிறு  குழந்தைக்கு புரியவைப்பது
என்று அந்த தாய்க்கு புரியவில்லை.

மிகவும் சங்கடப்பட்டாள்
பிறகு ஒருவாறு மனதை
திடப்படுத்திக்கொண்டு
அந்த ரகசியத்தை மகனுக்கு எடுத்து
சொல்ல தொடங்கினாள்
அது என்ன ரகசியம் ?

நாளை பார்ப்போம். . 

2 கருத்துகள்: