திங்கள், 14 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (216) சுதந்திர தின வாழ்த்து கதம்பம்




இசையும் நானும் (216)  


சுதந்திர தின வாழ்த்து கதம்பம்





ஆடுவோமே பள்ளு  பாடுவோமே
ஆனந்த சுதந்திரம்
அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே.

தாயின் மணிக்கொடி பாரீர்
அதை தாழ்ந்து பணிந்து
புகழ்ந்திட வாரீர்.

பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர்
இந்நினைவகற்றாதீர்.

சாதியை வீட்டிற்குள் வைப்போம்
மதத்தை மனதிற்குள் வைப்போம்.
இதயத்தில் அன்பை வைத்து
இந்தியனாய் ஒன்றுபடுவோம்.

இனங்களும் மொழிகளும்
வேறு வேறாயிருக்கலாம்
ஆனாலும் மனித இனம்
ஒன்றுதான் என்பதை
மறவாதீர்.

அண்டை வீட்டாருடன் சண்டை
அண்டை நாட்டுடன் சண்டை
அனைத்திற்கும் காரணம்
அன்பில்லா மனம் .

தாய் மண்ணே உனக்கு வணக்கம்
உயிர் வாழ உணவு தந்து
இருக்க இடம் தந்து அனைவரையும்
ஆதரிக்கும் தாய் மண்ணே உனக்கு வணக்கம்






Vande Maataram Vande Maataram Maataram Sujalaam Sufalaam Malayaj Sheetalaam Sasyashyaamalaam Maataram Vande Shubhrajyotsna Pulakit Yaaminiim Phulla Kusumita Drumadal Shobhiniim Suhaasinim Sumadhura Bhaashhinim Sukhadaam Varadaam Maataram Vande Maataram



1 கருத்து: