ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (209) திரைப்படம் -(பாலும் பழமும் பாடல்:ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்இசையும் நானும் (209) திரைப்படம் -பாலும் பழமும் 

 பாடல்:ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்


MOUTHORGAN

Movie Name :

பாலும் பழமும் 

Song Name : 

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்

 
Music : எம்.எஸ் விஸ்வநாதன்/ராமமூர்த்தி 
Singers :பி.சுசீலா 
Lyricist : கண்ணதாசன் 


ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள்மொழி கூறும் பறவைகள் ஒலி  கேட்டேன்
என் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே  எனும்
தாயின் ஒலி கேட்டேன் (ஆலயமணியின்)

இளகும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இது என்றான்
இரு விழியாலே மாலையிட்டான் (இரு)
என் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே 
எனும் தாயின் ஒலி கேட்டேன் (ஆலயமணியின்)

காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியாப் பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே (அடைக்கலம்)
என் இறைவன் அவனே அவனே
என பாடும் ஒலி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே  எனும் தாயின் ஒலி கேட்டேன் (ஆலயமணியின்)2 கருத்துகள்:

  1. ல்ல பாடலை செலெக்ட் செய்திருக்கிறீர்கள். ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. இந்த படத்தில் இது இரண்டாவது பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு