வியாழன், 3 ஆகஸ்ட், 2017

இசையும் நானும் (208) திரைப்படம் -(இரு வல்லவர்கள் (1966)) பாடல்:நான் மலரோடு தனியாகஇசையும் நானும் (208) திரைப்படம் -(இரு வல்லவர்கள் (1966)

பாடல்:நான் மலரோடு தனியாக 


Movie Name : இரு வல்லவர்கள் (1966)
Song Name : நான் மலரோடு தனியாக 
Music : வேதா 
Singers : டி .எம் .சௌந்தர்ராஜன் /பி .சுசீலா 
Lyricist : கண்ணதாசன் 

Nan Malarodu Thaniyaga – Iru Vallavargal Lyrics
Male :
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன் (நான்

Female :
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் 
Male :
நான் மலரோடு தனியாக ஏன்  இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன்
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Male :
நீ வருகின்ற வழி மீது யார் உன்னைக்  கண்டார்?
உன் வளை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்?  (நீ)

உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்?(உன்)


Female :
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன் 
Male :
நான் மலரோடு தனியாக ஏன்  இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன்
~~ @@ ~~ BG Music ~~ @@ ~~
Female :
பொன்  வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத  
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட  (பொன்)

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக 
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற (என்)

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
Male :
நான் மலரோடு தனியாக ஏன்  இங்கு நின்றேன்?
என் மகாராணி உன்னைக் காண ஓடோடி வந்தேன்2 கருத்துகள்: