இசையும் நானும் (213)
திரைப்படம் -பத்தாம் பசலி (1970)
பாடல்-வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
MOUTHORGAN
படம் : பத்தாம் பசலி (1970)
பாடியவர்கள் : டி.எம்.சௌந்தர்ராஜன், K.ஸ்வர்ணா
இசை : V குமார்
பாடல் : ஆலங்குடி சோமு
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு (வெள்ளை)
முல்லைச்சரமே செல்லக்கிளியே
கண்மூடித் தூங்கம்மா (கண்மூடித்)
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ
காற்றடிக்கிது மழையும் கொட்டுது
ஓலைக் குடிசையிலே (காற்றடிக்கிது)
இங்கு கட்டிலுமில்லை மெத்தையுமில்லை
உனக்கும் தூக்கம் இல்லை
காசுமில்லை படிப்புமில்லை
அன்புக்கு பஞ்சமில்லை
உன்னைக் காலமிங்கே அனுப்பி வச்ச
கணக்கும் புரியவில்லை (வெள்ளை)
தூக்குக்கயிற்றை தொட்டில் கயிறாய்
மாற்ற வந்தாயோ (தூக்குக்கயிற்றை)
அந்த தூக்கத்துக்கு தடை விதிச்சி
பார்க்க வந்தாயோ
துன்பத்திலே சிரிக்கச் சொல்லி
ரசிக்க வந்தாயோ
தெய்வம் ஒண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
இங்கு தெய்வமொண்ணு இருக்குதின்னு
காட்ட வந்தாயோ
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ
வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு
வேடிக்கை காட்டுது தூக்கமின்னு
முல்லைச்சரமே செல்ல கிளியே
கண்மூடித் தூங்கம்மா
கண்மூடித் தூங்கம்மா
ஆராரோ ஆரீரோ ஆரீரோ ஆரிரரோ
எனக்கும் மிகவும் பிடித்த பாடல். டி எம் எஸ் என்னும் வகையிலும் சரி, நாகேஷ் என்னும் மகா கலைஞன் வகையிலும் சரி.. கண்மூடித் தூங்கம்மா வரிகள் மட்டும் கொஞ்சம்...
பதிலளிநீக்குஇந்த பாடல் ஓராண்டாக என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.. நேற்று ஒரு வெறி. ஒரே நாளில் பலமுறை பயிற்சி செய்து வெளியிட்டுவிட்டேன். இன்னும் சோகத்தை இழையோட விட்டிருக்கலாம். அடுத்த வெளியீட்டில் பார்த்துக்கொள்ளுவோம். இன்னும் நிறைய பாடல்கள் மண்டைக்குள் என்னோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றன.அவைகளை வெளியேற்றியாகவேண்டும்.
நீக்குநீங்கள் நன்றாகப் பாடுவீர்கள் என்று தோன்றுகிறது. ஏன் நீங்கள் அவ்வப்போது வாய்ப்பாட்டு(ம்) முயற்சிக்கக் கூடாது?
நீக்குநான் எதையும் விட்டு வைப்பது கிடையாது.எனக்கு கடவுள் அமைத்துக் கொடுத்த யு டியூப் மேடை இருக்கிறது.அதில் பல பாடல்களை பாடி வெளியிட்டுள்ளேன். இதில் நானே இயற்றி பாடியுள்ள பாடல்களும் அடங்கும்.kindly என்னுடைய வலைப்பதிவில் scroll செய்து பாருங்கள் பார்க்கலாம். கேட்கலாம். இல்லாவிடில் ஒவ்வொரு பாடலாக இணைப்பை உங்களுக்கு அனுப்புகிறேன்.
நீக்குThe song written and sung by me.on Sri Andal
நீக்குhttps://youtu.be/oANLQN2bM9U
நீங்கள் எங்கடுடைய tamil songs எனும் whatsapp group ல் இணைந்து எங்களோடு பிடித்த பாடல்களை விமர்சித்து பதிவுடலாமே..உலகம் முழுக்க பரவி உள்ளோம்.
பதிலளிநீக்குஎனது கைபேசி 9500478257 ஆகும்.
உங்பளது எண் அனுப்புகளேன்.
நன்றி. ராஜேந்திரகுமார்
மனதில் ஆயிரம் வலிகள் இருந்தாலும் தெய்வம் வடிவில் குழந்தை வந்தவுடன் வலிகள் பறந்தோட இந்தபாடல் பல வகையில் ஆறுதலாய் இருக்கிறது.
பதிலளிநீக்கு