மனம் படுத்தும் பாடு (4)
மனம் படுத்தும் பாடு ( 4)
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
உலக வாழ்வில்
ஆனால் மனம் இறந்தால்தான் மார்க்கம்
உண்டு ஆன்மீக வாழ்வில்.
ஆம் இரண்டிற்கும் மனம்தான் காரணம்
உலக காரியங்களில் மனதின் துணை இல்லாது
எதுவும் செய்ய முடியாது.
எந்த செயலை செய்ய வேண்டுமென்றாலும் மனதின்
முழு ஒத்துழைப்பு தேவை.
அரை குறை மனதோடு செய்யப்படும் எந்த செயலும்
முழுமை அடையாது
அது வெற்றியை தராது .தோல்வியையே தரும்.
மனம் மட்டும் இருந்தால் போதாது .அதோடு புத்தியும்
இணையவேண்டும்.
ஏனென்றால் மனம் என்பது வேகமாக
ஓடிக்கொண்டிருக்கும் இயந்திரம்.
அதை எப்போது இயக்கவேண்டும்,
எப்போது நிறுத்தவேண்டும்
எப்போது வேகத்தை குறைக்கவேண்டும்,
அல்லது வேகத்தை கூட்டவேண்டும்
என்று முடிவு செய்வது நம் புத்தி அல்லது அறிவு.
அறிவு சரியாக இயங்கவேண்டுமேன்றால்
அதை வளர்த்துக்கொள்ளவேண்டும்.
அறிவு வளராமல் மனம் மட்டும்
இருந்து ஒரு பயனும் இல்லை.
அதனால்தான் நாம் இறைவனிடம்
எதையும் கேட்பது கூடாது
நல்ல அறிவை தருமாறு
வேண்ட வேண்டும்.
அறிவில்லாது செய்யும் செயல்கள்
தாறுமாறாகத் தான் போய்
நம்மை ஆபத்தில் கொண்டு விட்டு விடும்.
அதே நேரத்தில் ஒரு செயல் தொடங்குமுன்
அந்த செயலைப் பற்றிய முழு
தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
பிறகுதான். அந்த செயலில்
நமக்கு வெற்றி கிடைக்கும்.
செயலில் வெற்றி பெற மனம்
ஒருமைப்படவேண்டும்
மனம் ஒருமைப்படாவிடில் கவனம் சிதறி
செயலில் குழப்பம் ஏற்பட்டு
தொடங்கிய செயல் பாதியிலேயே நின்றுவிடும்.
மனதை புரிந்து கொள்வோம்
வாழ்வில் வெற்றிகளை குவிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக