அடிமைத்தனத்தின் ஆணிவேர் எது?
அடிமைத்தனத்தின்
ஆணிவேர் சுயநலம்தான்
அடிமைத்தனம் எங்குள்ளது?
அது எல்லா இடத்திலும் கடவுளைப் போல்
நீக்கமற நிறைந்துள்ளது
மக்கள் ஒரு அடிமைத்தனத்திலிருந்து மீண்டு
மற்றொரு அடிமைத்தனத்தில் தானே வலிய
சென்று சிக்கிகொள்வதை வாடிக்கையாகக்
கொண்டுள்ளனர்.
இன்று அடிமைத்தனம்
இல்லாத இனமும் இல்லை
துறையும் இல்லை.
அது வெவ்வேறு முகமூடிகளில் மனித குலத்திற்குள்
நீக்கமற கலந்து விட்டது.
அதை இனம் பிரித்து பார்ப்பது மிக கடினம்.
தனி மனித அடிமைத்தனம்
தொடங்கி கூட்டம் கூட்டமாக
ஒரு மனிதருக்கு அடிமையாய் தன் தலையில்
வழுக்கை விழுந்த பின்னரும் வாழ்க்கையை
அர்ப்பணிப்பது அனைவரின் தலையாய கடமைகளில்
ஒன்றாகிவிட்டது.
பொது வாழ்க்கையில் அனைவரும் ஏதாவதொரு அரசியல் கட்சிக்கோ,நடிகருக்கோ, இயக்கத்திற்கோ, மதத்திற்கோ அல்லது பணம், புகழ் சம்பாதிற்பதர்க்கோ அல்லது ஏதாவது ஒரு சில அற்ப பலன்களுக்காக /ஆதாயத்திற்காக அடிமைகளாக இருக்கிறார்கள்.
தனி மனித வாழ்க்கையில் போதை,மது, உணவு, ஒழுக்கமற்ற செயல்கள். தொலைகாட்சி போன்ற பல விஷயங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள்.
இவைகள் அனைத்தும் அவர்களை மீள முடியாத சிக்கலில் தள்ளி அவர்கள் வாழ்க்கையை எதையும் சிந்திக்க விட முடியாதபடி செய்து அவர்கள் வாழ்க்கையை நரகமாக்குகின்றன.
ஒவ்வொரு கூட்டமும் அவர்களுக்கு எதிராக செயல்படும் கூட்டத்தை அடக்கி ஒடுக்கி அழிக்க முற்படுவதால் உலகில் என்றும் அமைதி நிலவுவதில்லை.
இது உலகம் தோன்றிய காலம் தொடங்கி இந்நிலை நீடித்து வருகிறது.
எதிர்காலத்திலும் அப்படிதான் இருக்கும்.
அலைகடலில் அலைகள் என்றும் ஓயப்போவதில்லை.
அழிந்துபோகும் அற்ப சுயநல பிண்டங்கலான மனிதர்களுக்கு அடிமையாக
வாழ்நாள் முழுவதும் இருப்பதிலிருந்து நாம் கடைதேறவேண்டுமானால் ஒரு கால கட்டத்தில் வெளி வந்துதான் ஆகவேண்டும்
நம்மையெல்லாம் காப்பாற்ற அலைகடலில் அரி துயில் கொண்டுள்ள
அரங்கனை சரணடைந்து அவன் பாதம் பணிந்தேத்தினால்
அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபடலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக