சனி, 13 பிப்ரவரி, 2016

இன்று ரத சப்தமி

இன்று ரத சப்தமி 
                                         வண்ண ஓவியம்- தி.ரா.பட்டாபிராமன் 

புற உலகில் அனுதினமும்
இருள் போக்கி
ஒளி  தந்து இவ்வுலகில் 
வாழும் அனைத்து
உயிர்களுக்கும்
வாழ்வு தந்து

ஒவ்வொரு ஜீவனுக்கும் 
தந்தையாய்  விளங்கி
கண்கண்ட தெய்வமாய் விளங்கி
நம்மை காக்கும் சூரிய பகவானுக்கு
நன்றி சொல்வோம்

நம்முள்ளே ஆன்ம  ஒளியாய்
இருந்துகொண்டு
தன்னை நாடி துதிப்பவர்கெல்லாம்
வெற்றியும் ஆனந்தமும் தரும்
மங்கலரூபனை நன்றியுடன்
இந்நாளில் நினைந்து நினைந்து
போற்றி மகிழ்வோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக