செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

யார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாமா ?

யார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாமா ?

யார் வேண்டுமானாலும் உபதேசம் செய்யலாமா ?

யார் வேண்டுமானாலும்
உபதேசம் செய்யலாமா ?

கூடாது.

ஆனால் இன்று எல்லோரும் தங்களிடம்

உள்ள டப்பாவில் அங்கு இங்கு கேட்ட

படித்த தகவல்களை தங்கள் மனம் போனபடி

திரித்து பொய்களை உண்மைபோல்

அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


அவர்களை நாடி குறுக்கு வழியில் தங்கள்

ஆசைகளை ஆன்மிகம் மூலம் நிறைவேற்றிக்கொள்ளலாம்

என்று பல லட்சம் மக்கள் நாடி ,தாடி வளர்த்துக்கொண்டு

கொட்டைகளை கழுத்தில் மாட்டிக்கொண்டு

அவரவர் கடமைகளை செய்யாமல் சேவை என்ற பெயரில்

வாழ்வை வீணாக்கி கொண்டிருக்கிறார்கள்.


எந்த வேலையை செய்ய வேண்டுமென்றாலும் அதற்கு உரிய

அனுமதி பெற்றிருக்கவேண்டும்.


அனுமதி இல்லாமல் செய்யப்படும் அனைத்து  செயல்களும்

செயல்களும் அனர்த்தத்தில்தான்  போய் முடியும் என்பதை

நாம் கண்கூடாக தினமும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம்


உதாரணத்திற்கு ஒரு போர் வீரன் கையில் ஆபத்தான துப்பாக்கி

இருக்கிறது .விசையை தட்டி விட்டால் பல நூறு குண்டுகளை

வெளியே தள்ளிவிடும். பல பேரைக் கொன்றுவிடும்


அதை எங்கு, யார் மீது , எப்போது ,எவ்வளவு  நேரம் ,எதுவரை

பயன்படுத்தவேண்டும் என்பதற்கு அவன் உரிய அதிகாரிகளிடம்

உத்திரவு பெற்ற பிறகுதான் செய்ய வேண்டும்.


அப்படி செய்தால் அவன் செயல் தண்டனைக்கு உள்ளாகாது.


அதை தவறாக பயன்படுத்தினால் தண்டனைக்கு உள்ளாவான்.


அதுபோல்தான் உபதேசங்களும் உபதேசம் பெற்றவர்களால் தகுதியுடைய

நபர்களுக்கு உள்ளிருக்கும் இறைவனின் அனுமதி பெற்றே

வழங்கப்படவேண்டும்.


இல்லாவிடில் ராவணன்களும் துரியோதனன்களும், துச்சாதனன்களும் கம்சன்களும், , இரண்யகசிபுகளும், சூரபத்மன்களும், பச்மாசுரனும், பகாசுரனும் போன்ற அசுரர்கள்தான் உருவாகி மக்களுக்கு
இன்னலை விளைவித்துக்கொண்டிருப்பார்கள்.



ஆகையால் உபதேசம் அளிப்போரும் உபதேசம் பெற நினைப்போரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இல்லையேல் இருவரும் இன்னலுக்கு ஆளாவார்கள்

அவர்களால் நாம் வாழும் மனித சமுதாயமும். தொடர்ந்து துன்பங்களை சந்தித்துதான் ஆகவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக