செவ்வாய், 1 மார்ச், 2016

இசையும் நானும் (113)

இசையும் நானும் (113)

இசையும் நானும் (113)


இசையும் நானும் என்னும் தொடரில் 

என்னுடைய  113வது  காணொளி 

மவுத்தார்கன் இசை 

காலத்தால் அழியாது நிலைத்து  நிற்கும் 
கருத்துள்ள  பாடல்.   எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
வைஜயந்திமாலா   -அருமையான நடிப்பு 

Image result for then nilavu


தமிழ் பாடல்- மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ ...
படம் :தேன் நிலவு      -பாடல் -கண்ணதாசன் 


இசை-எ .எம் .ராஜா -  பி சுசீலா அவர்களின் அற்புத குரலில் பெ: மலரே மலரே தெரியாதோ
மனதில் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்
காதலர் உன்னை காண வந்தால்
நிலையை சொல்வாயோ என் கதையை சொல்வாயோ....

பெ: மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்......

பெ: காட்சிகள் மாறும் நாடகம் போலே
காலமும் மாறாதோ…. காலமும் மாறாதோ
காலங்களாலே வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ…. பாதையும் மாறாதோ
யார் மாறிய போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது….. என் நிலையும் மாறாது.....

பெ: மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்.....

பெ: கண்களில் தோன்றும் காட்சியில் ஒன்றாய்
கலந்தே நின்றாரே ….கலந்தே நின்றாரே
நினைவுகள் தோன்றும் நெஞ்சில் என்றும்
நிறைந்தே நின்றாரே….. நிறைந்தே நின்றாரே
இனி அவருடன் வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ….என் மண நாள் வாராதோ....

பெ: மலரே மலரே தெரியாதோ
மனதின் நிலைமை புரியாதோ
எனை நீ அறிவாய் உனை நான் அறிவேன்.....கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக