ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

இதயத்தில் இறைவனுக்கு....

இதயத்தில் இறைவனுக்கு....

இதயத்தில் இறைவனுக்கு....

இதயத்தில் இறைவனுக்கு
இடம் கொடுத்தேன்
அவனை நினைக்கும் போதெல்லாம்
தேனாய் இனிக்கின்றான்ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


என் நாவிற்கு அவன் நாமம் சொல்ல
பழக்கி விட்டேன். அடடா !
அவன் நாமம் உரைக்க உரைக்க
உள்ளத்தில் ஓர் உற்சாகம் பிறக்குதடா !

எண்ணமெல்லாம் அவன் நினைவாய்
ஆகிவிட்டேன் .அதனால் என் வாழ்வு
வண்ண மயமாய் ஆகிவிட்டது
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

வேறு சிந்தனையற்று என்னை எப்போதும்
நினைப்பவர்தமக்கு நல்  வாழ்வை அமைத்து தருவது
என் கடமையன்றோ என்றல்லவோ
அவன் உறுதியளித்தான் கீதை தன்னில்

இவ்வுலகோருக்கு வாழ்க்கைப்படேன்
என்று உளமார நம்பிய கோதை என்னும்
பேதைதன்னை ஆட்கொண்டு அருளிய
சொன்ன வண்ணம் செய்தபெருமான்
அல்லவோ அந்த ஸ்ரீ ரங்கன்.

                                                 ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 


ரங்கனுக்கு சேவை செய்த எதி ராமானுஜன்
ராமனுக்கே தன்னை அர்ப்பணித்த அனுமந்தன்
கண்ணனையே எந்நேரமும் எண்ணி தன்
இனிய கானத்தால் அவனோடு கலந்து விட்ட மீரா

எளிமையான  வாழ்வு ஏகாந்தமான ராம பஜனை
வாழ்வில் சோகங்கள் அண்டாது காக்கும் ராம நாமம்
ஆசைகள் என்னும் பேய்கள் நம்மிடம் வாலாட்டாது
காக்கும் அனுமனின் திருநாமம் .
      

ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்

அறிந்து கொள்வீர் மானிடரே அழியும் உடலில்
பிறந்த நாம் அழியா நிலை பெற அவன் மீது
கொண்ட பக்திதான் அனைத்தையும் தரும்
என்பதை உணர்ந்து கொள்வீர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக