திங்கள், 22 பிப்ரவரி, 2016

வடிவமற்ற பரம்பொருளே !

வடிவமற்ற பரம்பொருளே !

வடிவமற்ற பரம்பொருளே !

வடிவமற்ற பரம்பொருளே
வடிவங்கள் பல கொண்டாய்
புலன்களின் மூலமாய் இவ்வுலகைக்
காணும் ஒன்றும் புரியா எம்போன்றோருக்கு




ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

வடிவங்களாய் கண்ணுக்கு
விருந்தளித்தாலும் புலனுறங்கும்
வேளையில் மறைந்திடுவாய்

புலனுறங்கும் வேளையிலும் கனவுலகிலும்
காட்சியும் தருவாய் உன் வடிவையே எண்ணி
மகிழும் பக்தருக்கு.

தோன்றி மறையும்  உன் வடிவங்கள்
யாவினுள்ளும் தோன்றாது நின்று
அருள் செய்யும் பரம்பொருளே  !
உன்னை நாடாது ஒரு செயலும்
இவ்வுலகில் நடைபெறுமோ?

ஆட்டுவிப்பதும், அடைக்கலம் தருவதும்
அவன்  செயலென்று உணராது அகந்தை
கொண்டு அலையும் மனமே !

நீ  அவன் பாதமே கதியென்று
சரணடைந்திடுவாய் !

தடையிலா  ஆனந்தம் பெற்று
இவ்வுலகில் என்றும் இன்பமாய்
வாழ்ந்திடவே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக