நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்?
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட
மாந்தரை நினைந்து விட்டால்?
இந்தியர்களைப் போல ஒரு மூடர்கள்
உலகெங்கும் கிடையாது?
எப்போதும் பிறருக்கு அடிமை சேவகம்
செய்வதிலேயே இன்பம் காணும் அற்ப கூட்டம் .
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்க்காமலே அப்படியே
நம்பி அனைத்தையும் இழந்துவிட்டு புலம்பும் கூட்டம்.
சுயமாக எதைப் பற்றியும் சிந்திக்காமல்
அப்படியே முழுவதுமாக
நம்பி மோசம் போகும் கூட்டம்.
எத்தனை முறை ஏமாந்தாலும் கொஞ்சம் கூட
விழிப்புணர்வு பெறாமல் மீண்டும் மீண்டும் ஏமாந்து தாங்கள் பாடுபட்டு சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் இழந்து தொலைகாட்சியில்
அனுதினம் புலம்பி திரிவதில் ஆனந்தம் அடையும் கூட்டம்
அற்ப உணர்சிகளுக்கு அடிமையாகி எதற்கெடுத்தாலும்
பொது சொத்துக்களை அழித்து
நிர்மூலமாக்கும் மூடர்கள் கூட்டம்.
வெட்டி வேதாந்தம் பேசி திரிந்து உழைக்காமலேயே
உயர்ந்த நிலைக்கு சென்றுவிட குறுக்கு வழியை தேடும்
கிறுக்குக் கூட்டம்.
தன்னிடம் உள்ள விலை மதிப்பற்ற பொக்கிஷங்களை பயன்படுத்த தெரியாமல் பொய் விளம்பரங்களையே எப்போதும் நம்பி காசையும், உடல் நலத்தையும் தொலைத்துவிட்டு மாயும் கூட்டம்
இலவசங்களுக்காக தங்கள் உழைப்பையும், நேரத்தையும் , தன்னிடம் உள்ள சேமிப்பையும் சுயநல அரசியல் வாதிகளிடம் தானம் அளித்துவிட்டு அவர்கள் பின்னால் ஓடி திரிந்து பிச்சைஎடுக்கும் கூட்டம்.
சுயநல ஆதாயத்திற்காக யாரை வேண்டுமானாலும் காட்டி கொடுக்கும் கயமை குணம் நிறைந்த கூட்டம்.
தேச துரோகிகளோடு கை கோர்த்துக் கொண்டு நாட்டிற்கு எதிராக சதி செய்யும்
ஈன பிறவிகள் நிறைந்த கூட்டம்.
பொறாமை, பேராசை ,சுயநலம் என்னும் பேய்களுக்குஉள்ளத்தில் இடம் கொடுத்து நாட்டையும் கெடுத்து தன்னையும் அழித்துக் கொள்ளும் நாசகார கூட்டம்.
பெண்களை தெய்வங்களாக போற்றுவது போல் நடித்து அவர்களின் வாழ்வை நாசமாக்கும் நய வஞ்சக் கூட்டம்.
நம் நாடு எத்தனையோ துறைகளில் முன்னேறி இருந்தாலும் இந்த அடிப்படை குறைகள் நீங்காவிடில் அனைத்தும் விழலுக்கு இரைத்த நீர் போல் வீணே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக