செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

மனம் படுத்தும் பாடு (3)

மனம் படுத்தும் பாடு (3)

மனம் படுத்தும் பாடு (3)

மனம் இல்லையேல் ஒன்றும் இல்லை

அதுதான் உள்ளதை இல்லாததாக காட்டுகிறது

இருப்பதை இல்லாததாக காட்டுகிறது

அதுதான் நம்மை இன்பத்திலும் ஆழ்த்துகிறது

அதுவே நம்மை துன்பத்திலும் ஆழ்த்துகிறது

அதுவே நம்மை அந்த துன்பத்திலிருந்தும் நம்மை மீட்கும்.
சக்தியாகவும் விளங்குகிறது

அது நனவுலகில் நிகழ்த்தமுடியாதவற்றை தன் கனவுலகில்

சாதித்துக் காட்டும்.தன்மை கொண்டது

அதுவே தேவையற்ற பயத்தை உண்டாக்கி நம்மை

நிலைகுலையவும் செய்துவிடும்.

அதுவே நமக்கு அசாத்திய துணிச்சலைக் கொடுத்து நம்மை

மகா வீரனாகவும் ஆக்கிவிடும்.

அதுவே நம்மோடு பல ஆண்டு பழகிய நண்பனை

கண்ணிமைக்கும் நேரத்தில்  பகைவனாக்கும் கொடூர தன்மையும் கொண்டது

அதுவே எதையுமே நம்மை ஆராய்ந்து பார்க்க விடாது செய்து

தீயவர்களின் ஆலோசனையை  நம்பி நம்மை நட்டாற்றில் தள்ளி

மோசம் போகவும் செய்யும்.

மனம் என்பது ஒரு காட்டாறு வெள்ளம் போன்றது

அதுபோல் எந்நாளும் வற்றாது பாய்ந்து கொண்டிருக்கும்

ஜீவ  நதியும் போன்றது.

மனதை சக்தியை சிதறவிடாமல் ஒருங்கிணைத்து, ஒருமையுடன் குவித்து

எவன் ஒரு இலக்கை நோக்கி செலுத்துகிறானோ அவன்தான் வாழ்வில்

வெற்றி பெறுகிறான்.

உலகில் நாம் செய்யும் எந்த செயலானாலும் வெற்றி பெற மனதின்

இன்றியமையாத சக்தி தேவை.

அதுவே நமக்கு நண்பன் .அதுவே நமக்கு பகைவனும் ஆகும்

எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.

இருக்கின்ற சக்தியை எதற்கும்  பயன்படுத்தாது சாக்கு போக்கு சொல்லி எல்லாவற்றிற்கும் பிறர் மீது குற்றம் சுமத்தும் குணம்  கொண்டவர்கள் இந்த உலகில் கோடானுகோடி

அவர்கள் என்றும் பிறர்க்கு வாழ்நாள் முழுவதும் அடிமை சேவகம் செய்து அதில்  கிடைக்கும்  அற்ப சுகத்தில் மூழ்கி இடை இடையே பிறர் மீது பொறாமைப் பட்டுக்கொண்டு  புலம்பிக்கொண்டே தங்கள் ஆயுளை  முடித்துக்கொள்ளுபவர்கள்

உலக வாழ்வில் சோம்பேறியாக இருந்துகொண்டு எதுவும் செய்யாமல் இருப்பவனும்  ஆன்மீக உலகில் இறைவனிடம் சரணாகதி செய்துவிட்டு ஒன்றும் செய்யாமல் இருப்பவனுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு. இரண்டு நிலைகளையும் ஒன்றாக கருதி  ஒப்பிட்டு பார்ப்பவன் மகா மூடன்

இரண்டு செயல்களும் வேறு வேறு அதை ஒப்பிட்டு பார்த்தல் சரியல்ல ,

அதன் பார்வை வேறு, நோக்கம் வேறு என்பதை  புரிந்து கொண்டு அந்தந்த

நோக்கத்திற்கு தகுந்தாற்போல் மனதை பயன்படுத்தவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக