வியாழன், 18 செப்டம்பர், 2014

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ் இல்லாவிடில் உன் வாழ்வு பாழ்


இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ் 
இல்லாவிடில் உன் வாழ்வு பாழ் 



ஒரு காட்டில்  ஒரு காகம் வசித்து வந்தது 
அது சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து 
வந்தது .ஒரு அன்னத்தை சந்திக்கும் வரை 

காகத்தின் நிறமோ கருப்பு. 
அன்னமோ வெண்மை நிறம் .அதைப் பார்த்தவுடன் 
தன் நிறமோ கருப்பு .அன்னத்தின் நிறமோ வெளுப்பு 
எனவே அது தன்னை விட மகிழ்க்சியாக இருக்கும் என்று 
தனக்குள் எண்ணிக்கொண்டது.

Image result for swan

அதன் மனது சமாதானம் அடையவில்லை. தன் 
கருத்தை அந்த அன்னத்திடம் நேரடியாகவே 
கேட்டு விட்டது. 

அதற்கு அன்னம் பதில் கூறியது. நீ  கருதுவதுபோல்தான் 
நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் ஒரு பச்சைக் கிளியைக் காணும் வரை. 
அதன் உடம்பில் பச்சை மற்றும் அதன் மூக்கு சிவந்த வண்ணத்தில் அழகாக இருப்பதைக் கண்ட பின் அதுதான் தன்னைவிட மகிழ்ச்சியான பறவை என்று எண்ணினேன். 


உடனே காகம் கிளியிடம் சென்று நீதான் எல்லாப் பறவைகளை விட மகிழ்ச்சியான பறவை என்றது. 

உடனே கிளி சொன்னது, நானும்  அப்படிதான் நினைத்துகொண்டிருந்தேன் பல வண்ணங்களுடைய தோகையை  விரித்து ஆடும் மயிலைக்  கண்டு அதுதான் நம்மை விட மகிழ்ச்சியான பறவை என்று நினைத்தேன் என்றது.

உடனே காகம்  மிருக காட்சி சாலைக்கு சென்று அங்குள்ள மயிலை காணச் சென்றது. அந்த மயிலைக் காண்பதற்கு ஆயிரக் கணக்கான மக்கள் வந்து சென்றார்கள். அவர்கள் எல்லோரும் சென்றபின் காகம் மயிலிடம் சென்றது. 

அன்பான மயிலே நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உன்னைக் காண்பதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகிறார்கள் .ஆனால் என்னை மக்கள் கண்டால் துரத்துகிறார்கள். சிலர் துன்புறுத்தவும் செய்கிறார்கள். இதைப் பார்க்கும்போது உலகிலேயே நீதான் மகிழ்ச்சியான பறவைபோல தெரிகிறது என்றது. 

மயில் தன் மனதில் உள்ள சோகத்தை காக்கையிடம் கொட்டியது.
நீ நினைப்பதுபோல் நான் அழகான வண்ணப் பறவை என கர்வம் கொண்டு  மகிழ்சியாக ஆடித் திரிந்தேன் இந்தக் கூட்டில் அடைபடும் வரை




இந்த மிருக காட்சி சாலையில் இருப்பவர்கள் அனைவரும்என்னைப் போல் பலரும் தங்கள் அழகை நினைத்து கர்வப்பட்டு திரிந்தவர்கள்தான் .தங்கள் சுதந்திரத்தை இழந்து கூட்டில் அடைபட்டு இவர்கள் போடும் சத்தற்ற உணவை தின்றுகொண்டு எங்கள் விதியை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம் என்றது மயில்  


எனக்கு இருக்கும் இந்த அழகுதான் என்னை இங்கு கூட்டில்  சிறைப்படுத்திவிட்டது.என்பதை இப்போதுதான் உணர்கிறேன். இருந்தும் என்ன செய்ய? என்னால்ஒன்றும்  செய்ய இயலாது. இந்த கூட்டிலேயே வாழ்ந்து மடிவதை தவிர வேறு வழியில்லை .


உன்னைத்தான் யாரும் சிறை பிடிப்பதில்லை .கூண்டில் அடைப்பதில்லை 
நீ சுதந்திரமாக மகிழ்ச்சியாக பறந்து திரிகிறாய். எனவே நீதான் உலகிலேயே மகிழ்ச்சியான  பறவை என்பதைப்  புரிந்துகொள் என்றது மயில்
 . 
காகத்திற்கு இப்போதுதான் புத்தி வந்தது. 

மனிதர்களும் இந்த காகத்தைப் போல்தான் நடந்துகொள்கிறார்கள்.
தேவையில்லாமல் தன்னை ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து தன்னிடம் உள்ள தனித் திறமையை அடையாளம் கண்டுகொள்ளாமல் புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்ளுவது போல் தங்கள் வாழ்வை நரகமாக்கி கொள்கிறார்கள் 


இதனால் வாழ்வு முழுவதும் எல்லாம் இருந்தும் அவர்கள் மன நிறைவற்ற வாழ்க்கை வாழ்வதுடன், தன்னை சுற்றியுள்ளவர்களின் மகிழ்ச்சியையும் கெடுக்கிறார்கள்

இறைவன் ஒவ்வொரு உயிருக்கும் ஒரு தனித் திறமையைக் கொடுத்துள்ளான் அதைக் கண்டறிந்து அதில் ஈடுபாடு கொண்டு தன்னை மேம்படுத்திக்கொண்டால்  வாழ்வு மகிழ்ச்சியாக இருக்கும், சாதனைகளையும் செய்ய முடியும்,

இனிமேலாவது அனைவரும் தன்னை மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதை விடுத்து தன்னிடம் உள்ள திறமைகளை மெருகேற்றி வாழ்வில் முன்னேறி மகிழ்ச்சிக்  கனியைப் பறிக்க முயல வேண்டும். 

மூலம் ;bhaskaran19@gmail.com

படங்கள் நன்றி.-googleimages 










2 கருத்துகள்: