இன்று முதியோர் தினம்
இன்று முதியோர் தினம்
கொண்டாடுகின்றனர்
முதியவ்ர்களுக்கென்று ஓர் தினம்
அக்டோபர் முதல் தினம் என்று
முத்தாய்ப்பாக உலகம் கொண்டாடுகிறது
இந்நாள் இவன் பிறந்த தினமாக
அமைந்துவிட்டது ரெட்டிப்பு மகிழ்ச்சி.
எனக்கென்ன குறைச்சல் (நீ) நான்
ஒரு ராஜா ,வந்தால் வரட்டும்
முதுமை என்று வரவேற்கிறேன்.
இளமையில் சாதித்தவர்களை விட
முதுமையில் சாதித்தவர்களின்
எண்ணிக்கைதான் அதிகம் இவ்வுலகில்
கடமைகளை முடித்தவனுக்கும்
கட்டுப்பாடோடு இயங்குபவர்க்கும்
முதுமை ஒரு வரப்ரசாதம்
கடமைகள் முடியாவிடில் அதற்க்கு
கவலைப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு
உண்டு என்று நம்பி ஒவ்வொரு நாளையும்
இறைவன் அளித்த பரிசாகக் கருதி
மகிழ்ச்சியுடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
நல்லதோர் நட்பு வட்டத்தில் இருப்பவர்க்கும்
நலம் நாடும் சுற்றங்கள் அமைந்தவர்க்கும்
அன்பு மனையாளும் உறவுகளும்
அமைந்தவ்ர்க்கும் முதுமை அருமை
ஒழுக்கத்தை தொலைத்தவர்க்கும்
ஓரவஞ்சனை செய்து வாழ்ந்தவ்ர்க்கும்
முதுமை கொடுமை ,கடுமை
மற்றும் வெறுமைதான்
கடந்தகால இன்பதுன்பங்களும் ,கசப்பான
நினைவுகளும் ,பிறருக்கு இழைத்த துன்பங்களும்
நெஞ்சில் இருந்தாலும் இனியாவது அவைகளை
மறந்து தன்னை திருத்திக்கொள்ள முத்தான
வாய்ப்பு முதுமை .அப்படி செய்தால் அருமை
பொறுமை வேண்டும் முதுமையில்
கடுமை கூடாது வாக்கினில் பதட்டம் கூடாது
செயலில் ,குறைகள் காணாது நிறைகளையே
காணும் சூத்திரம் அறிந்து செயல்பட்டால்
இந்த உடல் என்னும் பாத்திரம் பத்திரமாக
இருக்கும். இல்லையேல் நோய்கள்தான்
பற்றும்.படுக்கையில் தள்ளிவிடும்.
சுயநலம் கூடாது, சுறுசுறுப்பாய் இருக்கவேண்டும்
சூடான பேச்சு கூடாது கூடினால் குருதியின்
அழுத்தம் கூடிடும். கூற்றுவனின் கவனத்திற்கு
சென்றுவிடும்.வாழ்வு முடிந்துவிடும்
ஆசைகளை குறைத்துக்கொண்டால்
ஆனந்தமாக வாழலாம் .பூஜைகள் செய்தால்
பொங்கும் கடல் போன்ற மனமும் பூப்போல்
லேசாகிவிடும். .
உழைப்பும் ஓய்வும்,உதவும் எண்ணமும்
இருந்தால் முதுமைகாலம் இளமைக்காலத்தை விட
இன்பமாக இருக்கும். இதுதான் உண்மை.
முக்தியைத் தரும் முகுந்தனை, முருகனை,
முக்கண்ணனை, முப்பெரும் தேவியை ,
வணங்கி மகிழ இந்த பருவத்தை விட
தகுதியான பருவம் உண்டோ?
இன்று முதியோர் தினம்
கொண்டாடுகின்றனர்
முதியவ்ர்களுக்கென்று ஓர் தினம்
அக்டோபர் முதல் தினம் என்று
முத்தாய்ப்பாக உலகம் கொண்டாடுகிறது
இந்நாள் இவன் பிறந்த தினமாக
அமைந்துவிட்டது ரெட்டிப்பு மகிழ்ச்சி.
எனக்கென்ன குறைச்சல் (நீ) நான்
ஒரு ராஜா ,வந்தால் வரட்டும்
முதுமை என்று வரவேற்கிறேன்.
இளமையில் சாதித்தவர்களை விட
முதுமையில் சாதித்தவர்களின்
எண்ணிக்கைதான் அதிகம் இவ்வுலகில்
கடமைகளை முடித்தவனுக்கும்
கட்டுப்பாடோடு இயங்குபவர்க்கும்
முதுமை ஒரு வரப்ரசாதம்
கடமைகள் முடியாவிடில் அதற்க்கு
கவலைப்படாதீர்கள். எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வு
உண்டு என்று நம்பி ஒவ்வொரு நாளையும்
இறைவன் அளித்த பரிசாகக் கருதி
மகிழ்ச்சியுடன் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
நல்லதோர் நட்பு வட்டத்தில் இருப்பவர்க்கும்
நலம் நாடும் சுற்றங்கள் அமைந்தவர்க்கும்
அன்பு மனையாளும் உறவுகளும்
அமைந்தவ்ர்க்கும் முதுமை அருமை
ஒழுக்கத்தை தொலைத்தவர்க்கும்
ஓரவஞ்சனை செய்து வாழ்ந்தவ்ர்க்கும்
முதுமை கொடுமை ,கடுமை
மற்றும் வெறுமைதான்
கடந்தகால இன்பதுன்பங்களும் ,கசப்பான
நினைவுகளும் ,பிறருக்கு இழைத்த துன்பங்களும்
நெஞ்சில் இருந்தாலும் இனியாவது அவைகளை
மறந்து தன்னை திருத்திக்கொள்ள முத்தான
வாய்ப்பு முதுமை .அப்படி செய்தால் அருமை
பொறுமை வேண்டும் முதுமையில்
கடுமை கூடாது வாக்கினில் பதட்டம் கூடாது
செயலில் ,குறைகள் காணாது நிறைகளையே
காணும் சூத்திரம் அறிந்து செயல்பட்டால்
இந்த உடல் என்னும் பாத்திரம் பத்திரமாக
இருக்கும். இல்லையேல் நோய்கள்தான்
பற்றும்.படுக்கையில் தள்ளிவிடும்.
சுயநலம் கூடாது, சுறுசுறுப்பாய் இருக்கவேண்டும்
சூடான பேச்சு கூடாது கூடினால் குருதியின்
அழுத்தம் கூடிடும். கூற்றுவனின் கவனத்திற்கு
சென்றுவிடும்.வாழ்வு முடிந்துவிடும்
ஆசைகளை குறைத்துக்கொண்டால்
ஆனந்தமாக வாழலாம் .பூஜைகள் செய்தால்
பொங்கும் கடல் போன்ற மனமும் பூப்போல்
லேசாகிவிடும். .
உழைப்பும் ஓய்வும்,உதவும் எண்ணமும்
இருந்தால் முதுமைகாலம் இளமைக்காலத்தை விட
இன்பமாக இருக்கும். இதுதான் உண்மை.
முக்தியைத் தரும் முகுந்தனை, முருகனை,
முக்கண்ணனை, முப்பெரும் தேவியை ,
வணங்கி மகிழ இந்த பருவத்தை விட
தகுதியான பருவம் உண்டோ?
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ஸார்.
பதிலளிநீக்குமுதியவர்களை மதிக்க வேண்டும். முதியவர்களும் இளையவர்களைப் புரிந்து நடக்க வேண்டும்! :)))
நன்றி ஸ்ரீராம்
நீக்குஇளைஞர்களாக இருந்தவர்கள் தான்
முதியவர்களாக ஆகியுள்ளார்கள்.
இதுவரை அவர்கள் மனைவிக்காக
,தங்கள் குழந்தைகளுக்காக ,தங்கள் பெற்றோர்களுக்காக,
மற்றவர்களுக்காக வாழ்ந்து விட்டார்கள்.
அவர்கள் தங்களைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல்
பலர் வாழ்க்கை அமைந்துவிடுகிறது.
எனவே இளைஞர்கள் முதியோர்களுக்கு
அனுசரணையாக இருக்கக் கற்றுக்கொள்ளவேண்டும்.
முதியோர்களை குற்றம் சொல்வது
எந்த விதத்திலும் முறையில்லை என்பது என் கருத்து
இன்னும் பல முதியோர்கள் இளைஞர்களை விட
உடல் நலத்துடனும் துடிப்புடனும் இருக்கிறார்கள்
என்பதை இளைஞர் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவேண்டும். .
இல்லை ஸார். முதியவர்களை முற்றிலும் குறை சொல்வதை நானும் விரும்பவில்லை. நானும் இளைஞனில்லை! நான் பார்த்த சில சம்பவங்கள் அந்த வார்த்தையைச் சொல்ல வைத்தன! மற்றபடி உங்கள் கருத்தை முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன்.
நீக்குசிறந்த பதிவு
பதிலளிநீக்குசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
நன்றி
நீக்குபிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குமுதியோரைப் போற்றுவோம்
நன்றி KJ
நீக்கு