சனி, 13 செப்டம்பர், 2014

அந்த நாளும் வந்திடாதோ?

அந்த நாளும் வந்திடாதோ?

ஒரு கல்விசாலை திறக்கப்பட்டால்
பல சிறைச்சாலைகள் மூடப்படும்
என்று அன்று சொன்னார்கள்.

ஆனால் இன்று படித்தவன், படித்து வேலையில்லாதவன்,.படித்துக்கொண்டிருப்பவன்
அனைவரும் கொள்ளையடிப்பதை பகுதி நேர
பணியாக வைத்துக்கொண்டிருக்கின்றனர்.

மெத்தப் படித்தவன் விஞ்ஞான முன்னேற்றங்களை
பயன்படுத்தி பல லட்சம் மக்களை எளிதாக
ஏமாற்றி கொழுக்கிறான்.

எல்லாவற்றிற்கும் அடிப்படைக் காரணம்.
வாழ்க்கைக்கு தேவையான நல்ல
பண்புகள் வீட்டிலும் போதிக்கப்படுவதில்லை.
கல்விக்கூடங்களிலும் போதிக்கப்படுவதில்லை.

நாட்டை ஆள்பவர்களிடமும்
அந்த பண்புகள் இல்லை.


நம் நாட்டிலும் மற்ற அனைத்து  நாடுகளிலும்
சிறைச்சாலைகள் நிரம்பி வழிகின்றன.

பல நாடுகளில் சிறைச்சாலைகள் 5 நட்சத்திர விடுதிபோல் எல்லா வசதிகளையும் கைதிகளுக்கு அளிக்கின்றன. பல நாடுகளில் விலங்குகள்போல் சிறையில் உள்ளோர் கொடுமைப்படுத்தப்படுகிரார்கள்.

நம்நாட்டில் லட்சக்கணக்கானோர் சிறையில் காரணமின்றி
அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.சிறைக்கு சென்றவர்கள் கொடும் குற்றவாளிகளாகத்தான்  வெளியே  வருகின்றனர்.

ஆண்டுதோறும் சிறைச்சாலை பராமரிப்புக்காகவும், காவலர்களுக்காகவும், சிறைக் கைதிகளுக்காகவும், நீதி துறைக்காகவும் பல்லாயிரம் கோடி ரூபாய் வீணாகிறது. அதில் ஒரு பகுதி ஒழுக்க கல்விக்கு செலவு செய்யப்படுமானால்
இந்த உலகம் உருப்படும்,சீர்படும்

சமூகத்தில் ஒழுக்கம் குன்றியமையால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
ஒழுக்க கல்வி போதிக்கப்படுவதுடன், அதை வாழ்வில் கடைபிடிக்கவும் செய்தால்தான் இந்த பிரச்சினை தீரும். 

நிலைமை இவ்வாறிருக்கையில் நார்வே நாட்டில் போதிய குற்றவாளிகள் இல்லாமையால் 19 சிறைச்சாலைகள்  மூடப்படுவதாக ஒரு செய்தி கண்டேன்/

அந்த நாள் நம் நாட்டில் என்று வருமோ?




நன்றி-https://www.facebook.com/photo.php?fbid=928772110473281&set=a.613544981995997.1073741826.100000215019640&type=1&theater

4 கருத்துகள்: