கவிஞர்களின் வாழ்வு அன்றும் இன்றும்
முன்னாளில் சென்ற நூற்றாண்டு வரை
கவிஞர்கள் வறுமையில் தான் வாடி
வதங்கினார்கள்
அன்று அரசர்களையும் பின்னாளில்
செல்வந்தர்களையும் போற்றிப் பாடி
பிழைப்பை நடத்தினார்கள்.
அழியும் மனிதர்களைப் பற்றி பாட மறுத்து
அழியா பரம்பொருள் மீது பாடியவர்களும் உண்டு
இன்றோ ஒரு பாடலை இயற்றிவிட்டாலே அதுவும்
புகழ்பெற்றுவிட்டால் அவர்கள் செல்வச் செழுப்பிலே
மிதக்கிறார்கள்.
ஆனால் அன்று நிலைமை அவ்வாறு இல்லை.
தமிழுக்கு வாழ்வு கொடுத்த பாரதிக்கு
தமிழ் சமூகம் வாழ்வு கொடுக்கவில்லை ,அவனை
வறுமையில் தள்ளி இளமையிலேயே இந்த உலகத்தை
விட்டு விரட்டிவிட்டது.
அன்றைய பாரதியின் நிலை.
இந்த ஓவியத்தை வரைந்தபோது மனதில்
சோகம் நிறைந்தது .என்ன செய்ய ?
திருவிளையாடல்-சேர்ந்தே இருப்பது?
வறுமையும் புலமையும் -அன்று. இன்றல்ல
இன்று எழுதுபவர்களின் தலையெழுத்தே
மாறிவிடுகிறது.-அதிர்ஷ்டம் இருந்தால்.
இன்றைய கவிஞர்களின் வாழ்வு..
வாய்ப்பு, வசதி.என்ன என்பது
அனைவருக்கும் தெரியும் ...
முன்னாளில் சென்ற நூற்றாண்டு வரை
கவிஞர்கள் வறுமையில் தான் வாடி
வதங்கினார்கள்
அன்று அரசர்களையும் பின்னாளில்
செல்வந்தர்களையும் போற்றிப் பாடி
பிழைப்பை நடத்தினார்கள்.
அழியும் மனிதர்களைப் பற்றி பாட மறுத்து
அழியா பரம்பொருள் மீது பாடியவர்களும் உண்டு
இன்றோ ஒரு பாடலை இயற்றிவிட்டாலே அதுவும்
புகழ்பெற்றுவிட்டால் அவர்கள் செல்வச் செழுப்பிலே
மிதக்கிறார்கள்.
ஆனால் அன்று நிலைமை அவ்வாறு இல்லை.
தமிழுக்கு வாழ்வு கொடுத்த பாரதிக்கு
தமிழ் சமூகம் வாழ்வு கொடுக்கவில்லை ,அவனை
வறுமையில் தள்ளி இளமையிலேயே இந்த உலகத்தை
விட்டு விரட்டிவிட்டது.
அன்றைய பாரதியின் நிலை.
இந்த ஓவியத்தை வரைந்தபோது மனதில்
சோகம் நிறைந்தது .என்ன செய்ய ?
திருவிளையாடல்-சேர்ந்தே இருப்பது?
வறுமையும் புலமையும் -அன்று. இன்றல்ல
இன்று எழுதுபவர்களின் தலையெழுத்தே
மாறிவிடுகிறது.-அதிர்ஷ்டம் இருந்தால்.
இன்றைய கவிஞர்களின் வாழ்வு..
வாய்ப்பு, வசதி.என்ன என்பது
அனைவருக்கும் தெரியும் ...
உண்மைதான். செல்லப்பா ஸார் பதிவில் சுதேசமித்திரன் நாளிதழில் பாரதியார் இறந்த செய்தி வந்த செய்தியை எடுத்துப் போட்டிருக்கிறார். அவர் மரணமடைந்தபின் யார், யார் அவரின் இறுதிச் சடங்குக்கு வந்திருந்தார்கள் என்று அதே செய்தித் தாளில் வந்திருந்த செய்தித் துணுக்கையும் எடுத்துப் போட்டிருந்தார்.
பதிலளிநீக்குஓவியம் நன்றாக இருக்கிறது.
நன்றி ஸ்ரீராம்.
நீக்குபென்சிலால் வரைந்தேன்.
எனக்கு பிடித்த ஓவியங்களில் ஒன்று
ஓவியம்அருமை ஐயா
பதிலளிநீக்குபாரதியை கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்
உயிரோடு இருக்கும் வரை யாரையும் போற்றாத உலகம் ஐயா இது
நன்றி நண்பரே.
நீக்குஉலகம் என்ன செய்யும்?
உலகத்தை குறை கூறாதீர்
உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பார்கள்
அதில் வாழும் மனிதர்களைத்தான் குறை கூறவேண்டும்.
போற்றாவிட்டால் என்ன ?
தூற்றாமல் இருந்தால் போதாதா?
துரத்தி துரத்தி அடிக்காமல் இருந்தால் போதாதா?
தமிழனைப் போல் ஒரு பயந்தான்கொள்ளி
உலகத்தில் யாரும் இல்லை
வாய்ச் சொல்லில் வீரர்கள்.
வந்த வேகத்திலேயே காணாமல் போகும் காட்டாற்று வெள்ளம்போல் பொங்கி அடங்கிபோகும் உணர்ச்சி (யற்ற) பிம்பங்கள்
வறுமையில் நொடித்துப்போய் எட்டயபுரம்
மன்னரிடம் தன் சுய மரியாதையை குழி தோண்டி புதைத்துவிட்டு உதவி கேட்கச் சென்ற பாரதியாரை
கொடுங்கோலர்களான அன்னியருக்கு பயந்து பேடி போல் அவருக்கு உதவாமல் திருப்பி அனுப்பிய மன்னரின் செயல் காலத்தின் சுவடுகளில் படிந்த கறை என்றும் என் இதயத்தை விட்டு நீங்காது.
இந்த படத்தை பார்க்கும்போதெல்லாம் என் இதயம் பாரதிக்காக அழுவதை தவிர்க்க இயலுவதில்லை
நன்றி நண்பரே.
பதிலளிநீக்கு