கல்லைக் கண்டால் நாயைக் காணோம் ?
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்?
கல்லையும் நாயையும் மனிதர்களிடமிருந்து
பிரிக்க முடியாது போலும்!
ஒரு நாய் தெருவில் ஓயாமல்
குரைத்துக் கொண்டிருந்தது,
அது போடும் இரைச்சல் மிகவும்
சகிக்க முடியாமல் இருந்தது,
அதை துரத்த கீழே குனிந்து ஒரு
கல்லை எடுத்து அதன் மீது வீச முனைந்தபோது
அந்த நாயை அங்கு காணோம், அது எங்கோ
ஓடிவிட்டது,
ஆனால் சிறிது நேரம் கழித்து அது மீண்டும்
குரைக்கத் தொடங்கியது,
மீண்டும் அதே கதைதான், கல்லிருக்கும்போது போது நாயைக் காணவில்லை,
நாயிருக்கும்போது கல்லைக் காணவில்லை.
இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தினமும் எல்லோர் வாழ்விலும் நடக்கிற து, எனவே அதுவே ஒரு பழமொழியாக புழங்கத் தொடங்கிவிட்டது
உண்மையில் நாய் என்பது நம் மனம்தான்
அது ஏதாவது ஒரு பிரச்சினையைப் பிடித்துக்கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கிறது அதிலிருந்து விடுபட மனதை திசை திருப்ப கோயிலுக்கு சென்றுகல்லாய் நிற்கும் தெய்வ வடிவம் முன்பு நின்று பிரார்த்தனை செய்கின்றோம், அப்போது அந்த மனம் காணாமல் போகிறது, கோயிலுக்கு வெளியில் வந்ததும் அந்த மனம் மீண்டும் அதே பிரச்சினையைக் கிளப்புகிறது,
ஒவ்வொருவர் வாழ்விலும் நடைபெறும் இந்த சம்பவம்தான் ஒரு பழமொழியாக உருவெடுத்தது,
இதிலிருந்து ஒரு உண்மையைபுரிந்து கொள்ளவேண்டும்
பிரச்சினையிலிருந்து விடுபடவேண்டுமென்றால் அந்த பிரச்சினையுடன் நம்மை இணைத்துக்கொள்ளாமல் தனியாக நின்று அதை ஆராய்ந்தால் அதற்கான தீர்வு கிடைக்கும். அல்லது அந்த பிரச்சினையிலிருந்து மனதை திசை திருப்பினால் மனதிற்கு அமைதி உடனே கிடைக்கும்
எப்படிஎன்றால் தலைவலியின் கடுமையிலிருந்து மனதை திசை திருப்ப வலி வலிநிவாரணிகள் பயன்படுத்துவதைப்போல்
நிவாரணியின் வீரியம் குறைந்தவுடன் வலி மீண்டும் வந்துவிடும்.
வலிக்கான காரணத்தைகண்டறிந்து அதை தீர்த்துவைத்தால் மீண்டும் வலி வராது ,அதுபோல் பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதை சரிசெய்தால் மனம் அமைதி அடைந்துவிடும்.

"வலிக்கான காரணத்தைகண்டறிந்து அதை தீர்த்துவைத்தால் மீண்டும் வலி வராது ,அதுபோல் பிரச்சினைக்கான காரணத்தை அறிந்து அதை சரிசெய்தால் மனம் அமைதி அடைந்துவிடும்." என்ற சிறந்த வழிகாட்டலை வரவேற்கிறேன்.
பதிலளிநீக்கு