ஞாயிறு, 14 செப்டம்பர், 2014

எங்கெங்கும் காணினும் சக்தியடா

பாரதி அன்று பாடினான் 

எங்கெங்கும் காணினும் சக்தியடா 

இன்றுஎங்கெங்கும் காணினும் குப்பையடா

என்றுதான் பாடவேண்டும்.



இன்று தமிழ்நாட்டில்
குப்பைகள் இல்லாத இடமேயில்லை 

மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தனி தனியே பிரித்து போட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டும் அதை காற்றில் பறக்கவிட்டு விட்டு கண்ட இடங்களில் குப்பைகளை வீசி எறிவதில் நம் நாட்டு மக்களுக்கு இருக்கும் ஆனந்தம் வேறு எதிலும்  இல்லை 

மக்கும் குப்பை எது மக்காத குப்பை எது என்று 
தமிழ் நாட்டு மக்களுக்கு என்று 
புரியபோகிறதோ தெரியவில்லை 

எம்மதமும் சம்மதம் என்பதுபோல் எல்லா 
குப்பைகளும் ஒன்று என்று எண்ணுகிறார்கள் போலும். 

முக்கியமாக அவர்கள் குப்பைகளை போட தேர்ந்தெடுக்கும் இடம் கழிவுநீர் கால்வாய்கள், குப்பை தொட்டிகளின் வெளிப்புறத்தில், பேருந்து மற்றும், ரயில் வண்டி பாதைகள், நிலையங்கள், ,என எல்லா இடங்களிலும் குப்பைகளை போடுவது அவர்கள் இயல்பு. 


படித்தவன், பாமரன் என அனைவரும் இந்த விஷயத்தில் ஒன்றாக செயல்படுவது பாராட்டத்தக்கது

இதனால் எல்லாஇடங்களிலும் கழிவு நீர்தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை எல்லா நேரங்களிலும் பதம் பார்க்கின்றன

மக்களை வீடுகளிலேயே முடக்கி வைக்கின்றன

ஜன்னல் கதவுகளை திறந்து இயற்கை காற்றை 
சுவாசிக்க வழியில்லை

கதவை திறந்தால் துர்நாற்றம்தான்  வீசுகிறது

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு விரட்டிகளுக்காக
பல நூறு ரூபாய்களை மாதம்தோறும் அழவேண்டி உள்ளது




அப்போதும்  நம்மை கொசுக்கள் விடுவதில்லை. தில்லை நாடராஜன்போல் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நம் உடலிலிருந்து ரத்தத்தை உறிஞ்சி கோடிகணக்கில் கொழுத்து உடலில் பச்சை குத்துவதுபோல் எல்லாவற்றின்மீதும் மஞ்சள் நிறத்தில் முட்டையிட்டு ஆட்டம் போடுகின்றன. 

மனிதர்களில் பல வகைகள் இருப்பதுபோல நோய்களை  பரப்பும்
கொசுக்கள் மக்களுக்கு இலவசமாக நோய்கிருமிகளை நம்மிடமிருந்து ரத்தம்
பெற்றுக்கொண்டதற்காக அன்போடு பரிசு அளிக்கின்றன

அதை தவிர நோய்களில் மாட்டிகொண்டு மருத்துவ செலவு 
பல ஆயிரங்கள் அழுதும் இந்த மனித ஜன்மங்கள் 
கொஞ்சம் கூட பாடம் கற்றுகொள்வதாக தெரியவில்லை

ஆனால் என்ன துன்பபட்டாலும் 
குப்பைகளை கண்ட இடங்களில் வீசி எறிந்து 
மகிழும் இன்பத்திற்கு ஈடு இணை இல்லை
என்பது தமிழ் நாட்டு மக்களின் ஏகோபித்த  கருத்து 

4 கருத்துகள்:

  1. உண்மைதான் சகோதரியாரே
    என்று இந்நிலை மாறுமோ தெரியவில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி KJ

      என்னை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
      நாம் எல்லோருமே அர்த்த அர்த்தனாரீஸ்வரர்கள்தான்

      மாறாது மாறாது
      இது இறைவன் ஆணை.

      இப்பிறவியில் மனிதர்களாக பிறந்து பிறரின் உழைப்பை உறிஞ்சி கொழுக்கும் மனிதர்களை பழிவாங்க கொசுக்களாக பாதிக்கப்பட்டவர்கள் கொசுக்களாக பிறக்க குப்பைகள் தேவை.

      இது ஒரு சுழற்சி .இது என்றும் நிற்காது

      நீக்கு
  2. அன்று
    எங்கெங்கும் காணினும் சக்தியடா
    பாரதி பாடினான்
    இன்று
    எங்கெங்கும் காணினும் குப்பையடா
    நாம் தான்
    தெருவிலே போட்டிட்டுப் பாடுகிறோம்!

    எம்மைத் தெருவிலே போட்டவர்கள் மீது தான்
    பிழை
    எம்மில் இல்லை என்கிறது
    தெருக்குப்பை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன செய்வது ?
      பழி ஓரிடம்
      பாவம் ஓரிடம்
      இதுதான் இவ்வுலக நீதி

      நீக்கு