வியாழன், 4 செப்டம்பர், 2014

புச்சுக் குட்டியும் நானும் (1)

புச்சுக் குட்டியும் நானும் (1)

புச்சுக்குட்டி என்றால்
என்னவென்று குழம்ப  வேண்டாம்.
பூனைக்குட்டிகளுக்கு
நான் வைத்த செல்லப் பெயர்.

எனக்கு பூனைகளை மிகவும் பிடிக்கும்.
இருந்தாலும் பூனைகள் என்றாலே
ஒரு பயம், ஒவ்வாமை வந்துவிடுமோ அல்லது
தன்  கூறிய  நகங்களினால் பிராண்டிவிடுமோ என்று பயம்.

எல்லாவற்றிற்கும் மேலாக பூனை உடலிலிருந்து
ஒரு மயிர் விழுந்தால்கூட அது பெரிய பாவம் என்று புராண கதைகளில் படித்தது .இவை எல்லாம் சேர்ந்து ஒரு குழப்பம் இருந்தது.

அதனால் பூனைகள்.  என்னிடம்
ஒட்டிக்கொள்ள வந்தால்கூட அதை துரத்தி விடுவேன்.

இருந்தாலும் விதி யாரை விட்டது.
என் வீட்டு தோட்டத்தில் கிணற்றில் ஓரத்தில் மூன்று பூனைக்குட்டிகள். மியாவ் மியாவ் என்று அழகாக கத்திக்கொண்டிருந்தன.
அப்போதுதான் இந்த உலகத்திற்கு வந்துள்ளது. போலும்.
பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தது.
அதன் தாய் இரை தேடப் போயிருந்தது

மனது கேட்கவில்லை .
ஒரு தட்டில் பால்  ஊற்றி வைத்தேன் .
அந்த மூன்று குட்டிகளும்  குடிப்பதை
பார்க்க இன்பமாக இருந்தது.

இப்படியாக பூனைக்குட்டிகளுடன்
ஒரு பந்தம் ஏற்ப்பட்டுவிட்டது.

அப்போதுதான் புதியதாக
ஒரு டிஜிட்டல் காமிராவாங்கியிருந்தேன்
.
அவைகளின் ஒவ்வொரு அசைவையும்
படம் பிடிக்க தொடங்கினேன்.
(தொடரும்)


4 கருத்துகள்:

 1. அவைகள் விளையாடுவது அழகாக இருக்கும் என்றாலும் பூனைகளுக்கு நாய்கள் தேவலாம். பூனைகளின் திருட்டுத்தனம் நாய்களிடம் இருக்காது! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திருட்டுத்தனம் என்பது மனிதர்களுக்கே உள்ள
   உயரிய பண்பு. விலங்குகளுக்கு அந்த குணம் இல்லை. அவைகள் அவ்வாறு செய்வதற்கு நாம்தான் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கிறோம் . அவ்வளவுதான்.
   பூனைகள் மிகவும் பாசம் மிக்கவை. highly sensitive also ஒரு ஆண்டு அவைகளுடன் பழகினேன். நம் கதை ஜடபரதன் போல் ஆகிவிடக்கூடாது என்று அவைகளின் உறவைத் துண்டித்துவிட்டேன். அவைகள் சில பாடங்களைக் கற்றுத் தந்தன. இனி வரும் பதிவுகளில் காணலாம்.

   நீக்கு
 2. பூனைகளிடம் கற்றுக்கொண்ட பாடம்..

  இனிய ஆசிரியர் தின வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு