ஆட்சிகள் ஆள்பவர்களுக்கா
அல்லது மக்களுக்கா?
அல்லது மக்களுக்கா?
ஆனால் உண்மையில் நடப்பதென்ன ?
இலவசங்களைக் கொடுத்துதான்
ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற
நிலை உருவாகிவிட்டது
இது சரியா? இது முறையா?
கட்சிகள் ஏராளம். பலர்
கையில் காசில்லாமல்
கையில் காசில்லாமல்
தலைவர்கள் ஆகிறார்கள்.
பதவிக்கு வந்தபின்
பதவிக்கு வந்தபின்
பொது சொத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள்.
அரசின் பணத்தை இலவசங்கள் என்ற பெயரில்
வாரி இறைத்துவிட்டு அவர்கள்தாங்கள் நன்மை செய்ததுபோல் விளம்பரம் தேடிக்கொள்ளுகிறார்கள்.
மக்களின்உணர்ச்சிகளை தூண்டிவிட்டு
தூண்டிலில் சிக்கிய மீன்களைப் போல் மக்களை பலியிடுகிறார்கள்.
அவர்களின் வாழ்வாதாரத்தை, வேலை வாய்ப்பை, அவர்களின், அறிவை, சுகாதாரத்தை முன்னேற்ற என்ற உருப்படியான
நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை.
கட்சி தலைவர்களுக்காக கண்மூடித்தனமாக
தொண்டர்கள் தேவையின்றி மோதிக்கொள்கிறார்கள்.
உண்மையாக வரி செலுத்துபவர்களின் பணம்
அவர்களுக்காக செலவிடப்படுவதில்லை.
தரமான சாலைகள் இல்லை, தடையில்லா மின்சாரம் இல்லை.,
தரமான சாலைகள் இல்லை, தடையில்லா மின்சாரம் இல்லை.,
லஞ்ச லாவண்யமற்ற ,துரித கதியில் செயப்படும் நிர்வாகம் இல்லை.
எங்கு பார்த்தாலும், ஏதாவது ஒரு காரணத்திற்க்காக, சாலை மறியல், கடை அடைப்பு , பொது மக்கள் மீதும், பொது சொத்துக்கள் மீது வன்முறை .பொதுக்கூட்டங்கள் இதுதான் இன்றைய தமிழகத்தின் சாபக்கேடு.
.
அரசு ஏழைகளுக்காகசெலவிடப்படும் தொகை அவர்களைப் போய் சேருவதே கிடையாது. செல்லும் வழியில் உள்ள சுரண்டல் பேர்வழிகளால் உறிஞ்சப்பட்டு வருகிறது.
இயற்கை வளங்கள் தனி நபர்களால் அரசு ஆதரவோடு
கொள்ளை அடிக்கப்படுகின்றன
தவறுகளை தட்டி கேட்பவர்கள் செல்லாக் காசாக்கப்படுகின்றனர்
இல்லை அழிக்கப்படுகின்றனர் .
இல்லை அழிக்கப்படுகின்றனர் .
நீதி துறை நீதி வழங்க பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும், மேல் முறையீடுகளால் தீர்ப்புகள் பயனின்றிப் போகின்றன.
அரசின் சலுகைகளை அனுபவிக்கும் அடிமட்டத்தில் உள்ள சில பிரிவினர்கள்,குடிக்கு அடிமையாகி தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றனர்.
வீட்டிலும் சரி, கல்விக்கூடங்களிலும், பொது வாழ்க்கையிலும் ஒழுக்கம் இல்லை. அதனால் சமூகம் சீர்கெட்டு விட்டது.
ஊடகங்கள் மக்களுக்கு தவறான தகவல்களை தந்து
குழப்புகின்றன.
எதற்கெடுத்தாலும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவதும், பொது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு விளைவிப்பதிலுமே
அரசியல் கட்சிகளும் அதன் தொண்டர்களும் குறியாக உள்ளனர்.
பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகின்றனர். ஏழை ஏழையாகவே இருக்கிறான், கோழையாகவே இருக்கிறான்.
வேலை தேடுபவனுக்கு வேலை கிடைக்கவில்லை. உழைப்பவனுக்கு உரிய கூலி கிடைக்கவில்லை. இவைகளை அரசு கண்டு கொள்வது கிடையாது
உழைக்கின்ற கூட்டம்உழைத்துக் கொண்டிருக்கிறது. ஏமாற்றி பிழைக்கிற கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்
ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம்
நம் நாட்டை விட்டு விரட்டப்படவேண்டும்.
ஏமாற்றி பிழைக்கின்ற கூட்டம்
நம் நாட்டை விட்டு விரட்டப்படவேண்டும்.