வெள்ளி, 12 ஜனவரி, 2018

மார்கழி சிந்தனைகள்

மார்கழி சிந்தனைகள்

மார்கழி சிந்தனைகள்

ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள்
கதிரவனின் வெப்பத்திலிருந்து
நமக்கு நிழல் தருகின்றன

அதன் இலைகளோ உயிர்கள்  வெளிவிடும்
நச்சுக் காற்றை உட்கொண்டு நம்மை வாழ
வைக்கும் பிராண வாயுவை நமக்கு
தருகின்றன

தாவரங்களின் அனைத்து  பகுதிகளும்
இந்த உலகில் அனைத்து உயிர்களும்
இன்பமாக வாழ தங்களின் வாழ்நாள்
முழுவதையும் அர்ப்பணிக்கின்றன.

ஆனால் மனிதர்கள் மட்டும் தங்களிடம்
உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழும்
எண்ணத்தை வளர்த்துக் கொள்வது
கிடையாது.

மாறாக எல்லாம் தனக்குத்தான் என்று
இறுமாப்பு கொண்டு கஞ்சனாய்
திகழ்ந்து ,காசேதான் கடவுள் என்று
அலைகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலகாரணன் அந்த
உலகளந்த உத்தமன் தான் என்பதை
வசதியாக மறந்து அவனை வாழ்த்தி
வணங்காது அவன் தரும் அனைத்து
சுகங்களையும் பெற்றுக்கொண்டு
நன்றி மறந்து அவன் மீது
வசை பாடுவதிலேயே குறிக்கோளாக
இருக்கின்றனர்.

அதன் விளைவுதான் அகந்தை கொண்டு
அடாவடித்தனம் செய்த மக்களுக்கும்
இறைவன் கொடுத்த தண்டனை.

இன்று குடிக்க சுத்தமான நீரில்லை.
சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை.
குடிநீரும் ,காற்றும், மண்ணும் நஞ்சாக
மாறிவிட்டன .ஆனால். மனிதர்கள்
தங்கள் தவறை உணர மறுக்கிறார்கள்.


ஆனாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றனர். நடந்து முடிந்த
நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று
பட்டி மன்றம் நடத்தி ஒருவர் மீது
ஒருவர் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர்.





அனைத்தையும் படைத்தவனை
மறந்துவிட்டார்கள்.

அவன் நாம் நலமாக வாழ
வகுத்து தந்த நெறிகளை புறந்  தள்ளி விட்டார்கள்.
இன்று வீணே புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வசை பாடுவதை விட்டு விட்டு ஆண்டாள்
அருளிய திருப்பாவை பாடல்களை பக்தியுடன்
இசைத்தால் போதும் இழந்ததனைத்தும்  கிடைக்கும்.
பொங்கும் மங்கள வாழ்வும் மலரும். 

1 கருத்து: