வெள்ளி, 19 ஜனவரி, 2018

இறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்?

இறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்?

இறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும். ?

நாம் எல்லோரும் மற்றொரு உயிருக்கு
இரையாக போக படைக்கப்பட்டவர்கள்.

எறும்புகளை பிடித்து தின்னும்
பிராணிகள்  அந்த பிராணி இறந்தவுடன்
அதன் உடல்கள் அந்த எறும்புகளுக்கே
உணவாகி போகும்.

மனிதர்களின் நிலையும்  அதேதான்.

மனிதன் தன்னை சுற்றி, நம்மை அண்டி வாழும்
அனைத்து  உயிர்களையும் கொன்று தின்று
தன் உடலை வளர்க்கின்றான் .

முடிவில் அவன் மரித்ததும்  அவன் உடல்
பலவிதமான உயிரினங்களுக்கு உணவாகி  போகிறது.

உடல் மண்ணுக்கு போகிறது.
அவன் உடலில் இருந்த உயிர் விண்ணுக்கு போகிறது.
மீண்டும் மண்ணுக்கு வர.

இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா?

அதற்க்கு நாம் மற்ற உயிரினங்களுக்கு இரையாக படைத்த
அந்த சக்தி எது என்பதை உணர்ந்து அந்த இழி நிலையிலிருந்து
விடுபடவேண்டாமா?

அந்த சக்திதான் இறைவன்.

அந்தஇறைவன் வேறெங்கும் இல்லை.

நமக்குள்ளேயே இருக்கிறான்.

அமைதியாக உள்ளத்தில் உள்ள எல்லா எண்ணங்களையும் சிறிது நேரம்
ஓரம் கட்டி வைத்து அமைதியாக அவன் குரலை கேட்டால் போதும்.

எல்லாம் விளங்கும். விடுதலையும்  கிடைக்கும்.

எப்போதும் வெளியே நாய் போல் ஓடிக்கொண்டிருக்கும் மனதை
உள்ளே திருப்புங்கள்.

உங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும்.

இறைவன்  இல்லை ன்று கூச்சல் போட்டுக்கொண்டிருப்பவர்கள் அவர்களின் மூச்சு நிற்கும் வரை. குரைத்துக் கொண்டிருக்கட்டும். பிறர் மீது குறைகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கட்டும்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக