செவ்வாய், 2 ஜனவரி, 2018

இசையும் நானும் (267) SONG ON SRI RAMA பாடல்: ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி !


இசையும் நானும் (267)  

SONG ON SRI RAMA

பாடல்: ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி !



இயற்றி பாடியவர்:தி.ரா.பட்டாபிராமன். 



ஸ்ரீ.ராமச்சந்திர மூர்த்தி !
என் உள்ளம் கவர்ந்த மூர்த்தி (ஸ்ரீராம)

அவனை வணங்கி வந்தாலே போதும்
தானே வந்தடையும் கீர்த்தி (ஸ்ரீராம)

அவனை தேடி அங்குமிங்கும் அலையவேண்டாம்

அன்போடு அவனை "ராம "ராம" என்று
அழைத்தாலே  போதும்

அன்போடு அனுதினமும் அவனை "ராம "ராம" என்று
அழைத்தாலே  போதும்  (ஸ்ரீராம)

அதர்மத்தை அழித்திட அவனிக்கு  வந்தவன் 
அடியார்களின் துயர் துடைத்திட 
ஆலயத்தில் சிலையாய் நின்றவன்  (ஸ்ரீராம)

அவன் திருவடிவு கண்டாலே 
கவலைகள்  காணாது போகுமே
அவன் திருநாமம் நினைத்தாலே 
நிம்மதி நம்மை வந்து சேருமே   (ஸ்ரீராம)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக