புதன், 10 ஜனவரி, 2018

ஆலயம் இல்லா ஊரில்...

ஆலயம் இல்லா ஊரில்...

ஆலயம் இல்லா ஊரில்...


ஆலயத்தில் இருக்கும்
இறைவனின் திருவடிவம்
ஆனந்தம் தருகிறது
அவனை அன்போடு
வணங்கி
வந்தாலே அமைதி பிறக்கிறது
உள்ளத்தில் அமைதி பிறக்கிறது. (ஆலயத்தில்)
સંબંધિત છબી
ஆலயம் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாமென்று
அவ்வை சொன்னாளே

அதுபோல் நம் உடல்  என்னும் கோட்டையில்
இதயத்தில் இறைவனை
 குடி வைக்காவிடில்
அது பேய்கள் திரியும் காடே  (ஆலயத்தில்)

இன்னல்கள் சூழ்ந்த
இவ்வுலகில் நமக்கு
துணையாய் வருவது
இறைவனின் திருவருளே

அவனை அன்புடன் பூஜித்து
உள்ளத்தில் அவனை என்றும்
மறவாது இருந்தால்  போதும்
வாழ்க்கை பயணம்
இனிதாகுமே  என்றும்
நம்  வாழ்க்கை பயணம்இனிதாகுமே (ஆலயத்தில்)

1 கருத்து: