வெள்ளி, 12 ஜனவரி, 2018

இசையும் நானும் (270) திரைப்படம் -பாக்கிய லட்சுமி (1961) பாடல்:மாலைப்பொழுதின் மயக்கத்திலே



இசையும் நானும் (270)  

திரைப்படம் -பாக்கிய லட்சுமி (1961)


பாடல்:மாலைப்பொழுதின் மயக்கத்திலே


MOUTHORGAN

 VEDIO-270


பாக்கிய லட்சுமி



Heroஜெமினி கணேசன் & சௌகார் ஜானகி 
Music Directorஎம். எஸ்.விஸ்வநாதன்/ராமமூர்த்தி 
LyricistKannadasan
Singersபி. சுசீலா 
Year1961


மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?

ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள்
என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி?
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி
மணமுடித்தவர் போல் அருகினிலே
ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையின் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி..
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி


இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சிலகாலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்.. மயங்குது எதிர்காலம்..
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நா...ன் கனவு கண்டேன் தோ...ழி



1 கருத்து: