ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பகவத் கீதையில் கண்ணன்...

பகவத் கீதையில் கண்ணன்...
bhagavath geetha images માટે છબી પરિણામ

மஹா பாரத போர் தொடங்க இருக்கிறது...

பகவான் கண்ணன் தேரை கவுரவர்கள்
படையை நோக்கி தேரை செலுத்த தொடங்குகிறான்.

அர்ச்சுனன் உடனே தேரை நிறுத்து என்று
கண்ணனுக்கு ஆணையிடுகிறான்.

தேரை இரு படைகளுக்கும் நடுவிலே நிறுத்து என்கிறான்

கண்ணன் கேட்கிறான்.ஏன் போரை தொடங்க இருக்கும் நேரத்தில்
தேரை நிறுத்து என்கிறாயே  ஏன் ? என்று அர்ச்சுனை பார்த்து
பார்த்தன் கேட்கிறான்.

அர்ச்சுனன் கூறுகிறான். எனக்கு போர் செய்ய பிடிக்கவில்லை
நான் என்குருமார்களையும், என்னுடைய மதிப்பிற்குரிய
நம் குடும்ப  பெரியவர்களையும் கொண்டு அதனால் அடையப்போகின்ற
ரத்தகறை படிந்த வெற்றி  தேவையில்லை. நான் போரிலிருந்து
விலகிவிடுகிறேன் என்று பிதற்றுகிறான்.

போர் ஏற்படாமல் இருக்க மேற்கொண்ட அனைத்து  முயற்சிகளும்
கைவிடப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் போர் செய்ய முடிவு செய்த நிலையில் அர்ச்சுனனின் இந்த மயக்கத்தை பேடித்தனம் என்று பகவான் கேலி செய்கிறான்.

அவனின் மயக்கத்தால் வரும் விளைவுகளை அவனுக்கு விளக்கி
அவன் அறியாமையை விலக்கி அவனுக்கு ஒரு தெளிவை உண்டாக்கி அவன் கடமையை மட்டும் உண்மையாக செய்து விளைவுகளை இறைவனிடம் விட்டுவிடுமாறு அறிவுறுத்தியதுதான் பகவத்கீதை.

வள்ளுவனும் "எண்ணி துணிக கருமம்" என்றான். துணிந்த பின்
பின் வாங்குவது இழிவான செயல் என்று தன் குறளில் குத்திக்  காட்டினான்.

பல ஆய்வுகளுக்கு பிறகு ஒரு செயலை செய்து முடிக்கவேண்டும் என்று முடிவு செய்தபின்  எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இழப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து பின்வாங்குவது கோழைத்தனம்

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவான சில கடமைகளும்
மற்றும் அவன் தேர்ந்தெடுத்த வேலை அல்லது தொழில் தொடர்பான கடமைகளும் உண்டு.

அதிலிருந்து யாரும் பின் வாங்க முடியாது. அப்படி செய்தால் அவர்கள்
உலகத்தாலும் தான் சார்ந்துள்ள சமூகத்தாலும் வசை பாடப்பட்டு, எள்ளி  நகையாடப்பட்டு தீரா பழிக்கும், அவமானத்திற்கும்  உள்ளாவார்கள்.

அதைவிட நம் நாட்டை காக்கும் போர் வீரர்கள்போல் தன்   கடமையை செய்து
அவர்கள் உயிரை இழந்தாலும் அனைவராலும் போற்றப்படும் புகழை அடைவதுபோல் அனைவரும் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட பணியினை சிறப்பாக,உண்மையாக செய்வதே நலம் பயக்கும் என்பது பகவான் தெரிவிக்கும் உண்மை. 

அனைவருக்கும் பொதுவான இந்த உண்மை ஜாதி, மதம்,இனம் கடந்து அனைவருக்கும் பொதுவானது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக