வெள்ளி, 26 ஜனவரி, 2018

இசையும் நானும் (273) திரைப்படம் -சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) பாடல்:சொல்லத்தான் நினைக்கிறேன்

இசையும் நானும் (273)  

திரைப்படம் -சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

பாடல்:சொல்லத்தான் நினைக்கிறேன் 





MOUTHORGAN
 VEDIO-273



Song : Sollathan Ninaikiren
Movie : Sollathan Ninaikiren (1973)
Singers : M.S. Viswanathan, S. Janaki
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Direction : K. Balachandar










சொல்லத்தான் நினைக்கிறேன் 
உள்ளத்தால்  துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு 
வார்த்தையின்றி தவிக்கிறேன் .ஆ. ஆ. (சொல்லத்தான்) 

காற்றில் மிதக்கும் புகை போல  
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே...(2)
மன வீடு அவன் தனி வீடு 
அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ 
அவன் வருவானே எங்கும் நிறைவானே  ஆ. ஆ. (சொல்லத்தான்) 

காதல் என்பது மழையானால் 
அவள் கண்கள் தானே கார்மேகம் (2)
நீராட்ட நான் தாலாட்ட 
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ 
அவள் வருவாளே சுகம் தருவாளே 

ஆசை பொங்குது பால் போலே 
அவள் அனல் போல் பார்க்கும் பார்வையிலே (2)
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் 
அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ 
அவன் அணைப்பானே என்றும்  நினைப்பானே ஆ. ஆ. (சொல்லத்தான்) 

நேரில் நின்றான் ஓவியமாய் 
என் நெஞ்சில் நின்றான் காவியமாய் ..(2)
நான் பாதி அவள்தான் பாதி என கலந்தாளோ 
கண்ணில் மலர்ந்தாளோ 
நெஞ்சில் கலந்தாளே  கண்ணில் மலர்ந்தாளே ஆ. ஆ. (சொல்லத்தான்) 




1 கருத்து: