திங்கள், 20 நவம்பர், 2017

மனம் என்பது என்ன?

மனம் என்பது என்ன?

மனமென்பது நினைவுகளின்
குப்பை தொட்டி.

அதில் கோடிக்கணக்கான
எண்ணங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

அவைகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்.
அவை அப்படியே கிடக்கும் .

நாம் வெளியில் நம் முன்னே உலாவும்
ஏதாவது ஒரு எண்ணத்தை கண்டு அதன் மீது
கவனத்தை செலுத்தினால். அது தொடர்பான
நம் மனதில் உள்ள எண்ணங்கள் ஒன்றொன்றாக
மேலே எழும்.

நாம் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால்
அவைகள் மீண்டும் போய் உறங்கி விடும்.

அவ்வாறு நாம் செய்யாவிடில் அது வெளியே போய்
அது தொடர்பான எண்ணங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு
வலிமை  பெற்று நம்மை ஆட்டி வைக்க தொடங்கும்.

அது பல தொடர் விளைவுகளுக்கு நம்மை ஆளாக்கி
நம் மனதின் அமைதியை கெடுத்துவிடும்

ஆகவே நாம் நம் மனதின் எண்ணங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

எண்ணங்கள் தோன்றும்போதே அது என், எதற்க்காக தோன்றுகிறது
என்பதை விசாரித்து நாம் அது விரிக்கும் வலையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பழகவேண்டும்.

அவ்வாறு செய்துகொண்டுவந்தால்.நாம் எப்போதும் அமைதியாக
இருக்க முடியும்.

நாம் நம்மை மகிழ்ச்சியாக இருக்க எந்த காரணத்தைக் கொண்டும் எதிர்மறை எண்ணங்களுக்கு ஊக்கமோ.  ஆக்கமோ அளிக்கக் கூடாது.

ஒரு எதிர்மறை எண்ணத்திற்கு நாம் முக்கியத்துவம் அளித்தால் அது புறத்தே உள்ள நம்மை சுற்றியுள்ள பல எதிர்மறை எண்ணங்கள் உடையவர்களோடு தொடர்பு கொண்டு நம்முடைய சக்தி எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிடும்.
அதனால் நாம் கூடிய மட்டும் அது போன்ற சிந்தனை உள்ளவர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.


2 கருத்துகள்:

  1. நம் எண்ணங்களின் காரணம் நாம் அறிந்திருப்போம். ஆனால் அறியாதது போலவே இருப்போம். உண்மையாக நம்மையே நாம் சரியாக புரிந்திருக்கிறோமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிந்துகொள்ள முயற்சி செய்தால் புரிந்து கொள்ளலாம். அதற்க்கு பொறுமை தேவை. விடா முயற்சி தேவை.

      நீக்கு