இந்த உலகில் எதற்காக பிறக்கிறோம்?
இந்த உலகில் எதற்காக பிறக்கிறோம்?
இந்த உலகில் எதற்காக பிறக்கிறோம்?
இந்த கேள்வியை யாரும் கேட்பதும் கிடையாது.
கேள்வி கேட்டால் பதில் சொல்ல யாருக்கும் தெரியாது.
ஒரு சிலர் ஏதோ புத்தகங்களை படித்துவிட்டோ அல்லது
யாரோ கூறியவற்றை மேற்கோள் காட்டி பதில் கூறுவார்கள்.
சாத்திரங்கள் நாம் பிறந்த கணம் முதல் மரணத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றன
அதனால் இந்த மரணத்திலிருந்து தப்பும் வழியை அறிந்துகொண்டு
மரணமில்லா பெரு வாழ்வு அடைய முயற்சிக்க வேண்டும் என்று
கூறுகின்றன.
சிலர் அதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால் அதற்கு முயற்சி செய்தவர்கள் எல்லாம் தன்னுடைய சுயநலத்திற்காக இறைவனிடம் வரங்களை மட்டும் நாடி. பெற்று தானும் துன்புற்று பிறரையும் துன்புறுத்தி மாண்டு போனார்கள்.
இதற்கு முக்கிய காரணம் நாம் நம் மனதில் எழும் எண்ணங்களை மட்டும் நம்பியே நம்முடைய வாழ்க்கையை நடத்திக்கொண்டு போவதுதான் காரணம்.
அந்த எண்ணங்கள்.தூய்மையாக இருந்தால் நன்மைகள் விளையும்.
தான் என்ற அகந்தையுடன் கூடி செயல்பட்டால். அதன் பிற விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த உலக வாழ்க்கை வாழ்வதற்க்கே.அதை அழகாக இனிமையாக வடிவமைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.
மரணத்தை பற்றி நாம் எப்போதும் சிந்திக்கவோ அல்லது வருத்தப்படுவதற்க்கோ ஒன்றுமில்லை. அது உறக்கம்போல் நம்மை அறியாமல் நம்மை எப்போது வேண்டுமானாலும் தழுவிக்கொள்ளும்.
நாம் நம் அகந்தையை முழுவதுமாக விட்டுவிட்டு நம்மை படைத்த அந்த சக்தியிடம் முழுவதுமாக சரணடைந்துவிட்டு. அவரவருக்கு விதிக்கப் பட்ட கடமைகளைமட்டும் செய்து கொண்டிருந்தால் போதுமென்று பகவான் கண்ணன் கீதையில் அறிவுறுத்தியபடி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால். நம்மை இன்ப துன்பங்கள் பாதிக்காமல் இவ்வுலக பயணத்தை இனிதே நிறைவு செய்யலாம்.

படித்தேன்.
பதிலளிநீக்குபடி "த்தேன்".
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்கு