வியாழன், 30 நவம்பர், 2017

இசையும் நானும் (252) திரைப்படம் -கை கொடுத்த தெய்வம் (1964) பாடல்: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ


இசையும் நானும் (252)  

திரைப்படம் -கை கொடுத்த தெய்வம் (1964)

பாடல்: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ


MOUTHORGAN

 VEDIO-252

Kai Kodutha Deivam
aayirathil oruthi amma nee lyrics માટે છબી પરિણામ

Movie: 

கை கொடுத்த தெய்வம் 

Year of release: 1964

Music: விசுவநாதன் ராமமூர்த்தி 
Lyrics: கண்ணதாசன் 
Singer.டி .எம்.சவுந்தர்ராஜன் 
Starcast: Cast: சிவாஜி கணேசன் 




ஆ: ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ 
உலகம் அறிந்திடாத பிறவி அம்மா நீ,
பார்வையிலே குமரி அம்மா
பழக்கத்திலே குழந்தை அம்மா
ஆயிரத்தில் ஒருத்தி அம்மா நீ.....(ஆயிரத்தில்)



ஆ: பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பாலிலும் வெண்மை பனியிலும் மென்மை,
பச்சை இளம் கிளி நீ சொல்வது உண்மை,
பாவிகள் நெஞ்சம் உறைந்திடும் வஞ்சம்
உண்மை என்று சொல்வதற்கு 
தெய்வமும் அஞ்சும்,
தேன் என்ற சொல் என்றும் தேன் ஆகுமோ
தீ என்று சொன்னாலும் தீ ஆகுமோ.....(ஆயிரத்தில்)



ஆ; பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும் 
பெண்ணோடு தோன்றி பெண்ணோடு வாழ்ந்தும்,,
பெண் மனது என்னவென்று புரியவில்லையோ
கண் என்ன கண்ணோ நெஞ்சென்ன நெஞ்சோ,
களங்கம் சொல்பவர்க்கு உள்ளம் இல்லையோ,
ஆதாரம் நூறு என்று ஊர் சொல்லலாம்,
ஆனாலும் பொய் என்று நான் சொல்லுவேன்....(..ஆயிரத்தில்)





புதன், 29 நவம்பர், 2017

இசையும் நானும் (251) திரைப்படம் -பார்த்திபன்கனவு (1960) பாடல்: கண்ணாலே நான் கண்ட கணமே

இசையும் நானும் (251)  

திரைப்படம் -பார்த்திபன்கனவு  (1960)

பாடல்: கண்ணாலே நான் கண்ட  கணமே 




MOUTHORGAN

 VEDIO-251




Movie: 

பார்த்திபன்கனவு

Year of release: 1960

Music: வேதா 
Lyrics: எ.மருதகாசி 
Singer.எ .எம் .ராஜா /பி.சுசீலா.
Starcast: Cast: ஜெமினி  கணேசன்-வைஜயந்திமாலா 

கண்ணாலே நான் கண்ட  கணமே 
உயிர் காதல்  கொண்டது மனமே 
இது முன்னாலே உண்டான உறவோ 
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)

எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து 
கண்ணோடு வா என்று சொல்லுதே 
இது முன்னாலே உண்டான உறவோ 
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)

யார் என்று கேட்காததேனோ 
யாரானால் என்னென்று தானோ (யார்)
கேளாத நெஞ்சில் யாரென்று கேட்டால் 
கூறானவேல் பாயும் அன்றோ...

யாரான போதென்ன கண்ணே 
நான் உண்ணும் ஆனந்த தேனே 
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல 
வேறென்ன நான் இன்னும் சொல்ல (நீ)

இனி எந்நாளும் நீ என்றும் எனக்கே (நீ)
என் இதயமெல்லாம் உனக்கே.(என்)



கண்ணாலே நான் கண்ட  கணமே 
உயிர் காதல்  கொண்டது மனமே 
இது முன்னாலே உண்டான உறவோ 
இதன் முடிவு எங்கோ எதுவோ..(கண்ணாலே)






திங்கள், 27 நவம்பர், 2017

இசையும் நானும் (250) இந்தி திரைப்படம் - Zabak (1961) song- तेरी दुनिया से दूर,

இசையும் நானும் (250) இந்தி திரைப்படம் -

Zabak (1961)

song-

तेरी दुनिया से दूर,

Movie/album:

Zabak (1961)

Singers: Mohammed Rafi, Lata Mangeshkar

Music Composer: Chitragupta


Zabak 1961.jpg


तेरी दुनिया से दूर,
चले हो के मजबूर,
हमें याद रखना
तेरी दुनिया से दूर,
चले हो के मजबूर,
हमें याद रखना
जाओ कही भी सनम
तुम्हे इतनी कसम
हमें याद रखना
जाओ कही भी सनम
तुम्हे इतनी कसम
हमें याद रखना
तेरी दुनिया से दूर
आयेंगी बहारें
तो तेरे ही फसाने
सुनायेंगी हमें
होगी तनहाई
तो आ के तेरी यादे
रुलायेंगी हमें
रुलायेंगी हमें,
तड़पायेंगी हमें
कभी देखी थी बहार,
कभी हम से था प्यार,
ज़रा याद रखना
ले जा जानेवाले
दुआयें मेरे दिल की,
किसी से क्या गिला
ले जा जानेवाले
दुआयें मेरे दिल की,
किसी से क्या गिला
तेरी ही खता है ना
मेरी ही खता है,
जो होना था हुआ
जो होना था हुआ,
है किसी से क्या गिला
देखो रोए मेरा प्यार,
कहे दिल की पुकार,
हमें याद रखना
तेरी दुनिया से दूर,
चले हो के मजबूर,
हमें याद रखना
जाओ कही भी सनम
तुम्हे इतनी कसम
हमें याद रखना
तेरी दुनिया से दूर

जाओ कही भी सनम
तुम्हे इतनी कसम
हमें याद रखना
तेरी दुनिया से दूर

ஞாயிறு, 26 நவம்பர், 2017

இசையும் நானும் (249) திரைப்படம் -இருவர் உள்ளம் (1963) பாடல்: கண் எதிரே தோன்றினாள் ...



இசையும் நானும் (249)  

திரைப்படம் -இருவர் உள்ளம் (1963)

பாடல்: கண் எதிரே தோன்றினாள் ...




MOUTHORGAN


Movie: இருவர் உள்ளம் 
Year of release: 1963

Music: கே.வி .மகாதேவன் 
Lyrics: கண்ணதாசன்
Singer.டி .எம் .சுந்தர்ராஜன்.
Starcast: Cast: சிவாஜி கணேசன்-சரோஜாதேவி 




கண் எதிரே தோன்றினாள் 
கனி முகத்தை காட்டினாள் 
நேர் வழியை மாற்றினாள் 
நேற்றுவரை ஏமாற்றினாள் (கண்)

பன்னீர் பூ போன்ற பார்வையும் 
நெற்றி பரப்பினிலே முத்தான வேர்வையும் 
பின்னி வரும் நாணம் என்னும் போர்வையும் 
சுற்றி பின்னலிட்ட கூந்தலென்னும் தோகையும்  கொண்டு 
இன்று (கண்) 

என்னை அவளிடத்தில் தருகிறேன் 
அவள் இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள் 
என்றும் அவள் எங்கள் வீட்டு திருமகளாவாள் 
அந்த இனிய மகள் எனது தாய்க்கு மருமகளானால் இன்று.(கண்)

திங்கள், 20 நவம்பர், 2017

மனம் என்பது என்ன?

மனம் என்பது என்ன?

மனமென்பது நினைவுகளின்
குப்பை தொட்டி.

அதில் கோடிக்கணக்கான
எண்ணங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

அவைகளை ஒன்றும் செய்யாமல் விட்டுவிட்டால்.
அவை அப்படியே கிடக்கும் .

நாம் வெளியில் நம் முன்னே உலாவும்
ஏதாவது ஒரு எண்ணத்தை கண்டு அதன் மீது
கவனத்தை செலுத்தினால். அது தொடர்பான
நம் மனதில் உள்ள எண்ணங்கள் ஒன்றொன்றாக
மேலே எழும்.

நாம் அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டால்
அவைகள் மீண்டும் போய் உறங்கி விடும்.

அவ்வாறு நாம் செய்யாவிடில் அது வெளியே போய்
அது தொடர்பான எண்ணங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு
வலிமை  பெற்று நம்மை ஆட்டி வைக்க தொடங்கும்.

அது பல தொடர் விளைவுகளுக்கு நம்மை ஆளாக்கி
நம் மனதின் அமைதியை கெடுத்துவிடும்

ஆகவே நாம் நம் மனதின் எண்ணங்களிடம் மிகவும் எச்சரிக்கையாக
இருக்கவேண்டும்.

எண்ணங்கள் தோன்றும்போதே அது என், எதற்க்காக தோன்றுகிறது
என்பதை விசாரித்து நாம் அது விரிக்கும் வலையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க பழகவேண்டும்.

அவ்வாறு செய்துகொண்டுவந்தால்.நாம் எப்போதும் அமைதியாக
இருக்க முடியும்.

நாம் நம்மை மகிழ்ச்சியாக இருக்க எந்த காரணத்தைக் கொண்டும் எதிர்மறை எண்ணங்களுக்கு ஊக்கமோ.  ஆக்கமோ அளிக்கக் கூடாது.

ஒரு எதிர்மறை எண்ணத்திற்கு நாம் முக்கியத்துவம் அளித்தால் அது புறத்தே உள்ள நம்மை சுற்றியுள்ள பல எதிர்மறை எண்ணங்கள் உடையவர்களோடு தொடர்பு கொண்டு நம்முடைய சக்தி எல்லாவற்றையும் கபளீகரம் செய்துவிடும்.
அதனால் நாம் கூடிய மட்டும் அது போன்ற சிந்தனை உள்ளவர்களிடமிருந்து விலகியே இருக்க வேண்டும்.


ஞாயிறு, 19 நவம்பர், 2017

இசையும் நானும் (248) TELUGU DEVOTIONAL-ST THIYAGARAJAR.

இசையும் நானும் (248) TELUGU DEVOTIONAL-ST THIYAGARAJAR.



இசையும் நானும் (248)  


TELUGU DEVOTIONAL-ST THIYAGARAJAR. 


பாடல்: Raama naamamu janma ratchaga mantramu






MOUTHORGAN




Song: raama naamamu

raamanaamamu 
raagam: aThaaNaa 
29 dheera shankaraabharaNam janya
Aa: S R2 M1 P N3 S
Av: S N3 D2 P M1 P G3 R2 S
taaLam: aadi
Composer: Tyaagaraaja 
Language: Telugu
pallavi
rAma nAmamu janma rakSaka mantramu tAmasamu sEyaka bhajimpavE manasA
anupallavi
sOmAruna nEtruDaina shrI rAmacandruniki sari evarUrA
caraNam
kAmakOTi rUpa rAmacandra kAmita phalada rAmacandra
jnAnasvarUpa rAmacandra tyAgarAjArcita rAmacandra


திங்கள், 13 நவம்பர், 2017

இசையும் நானும் (247) திரைப்படம் -புதிய பறவை பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்

இசையும் நானும் (247)  

திரைப்படம் -புதிய பறவை 

பாடல்: உன்னை ஒன்று கேட்பேன்




MOUTHORGAN


Movie: புதிய பறவை 
Year of release: 20.7.1964
Producer: சிவாஜி கணேசன்
Director: தாதா மிராசி
Music: விஸ்வநாதன்-ராமமூர்த்தி
Lyrics: கண்ணதாசன்
Singer:பி.சுசீலா
Starcast: Cast: சிவாஜி கணேசன்-சரோஜாதேவி 


பெ: உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்

பெ: காதல் பாட்டு பாட காலம் இன்னும் இல்லை
தாலாட்டு பாட தாயாகவில்லை
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

பெ: நிலவில்லா வானம் நீரில்லா மேகம்
பேசாத பெண்மை பாடாது உண்மை
கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும்
பெண்ணை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்

பெ: தனிமையில் கானம் சபையிலே மோனம்
உறவுதான் ராகம் உயிரெல்லாம் பாசம்
அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை
என்னை பாட சொன்னால் என்ன பாட தோண்றும்
உன்னை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்
என்னை பாட சொன்னால் என்ன பாட தோன்றும்… என்ன பாட தோன்றும்...






ஞாயிறு, 12 நவம்பர், 2017

அனுபவ ஞானம்(10)

அனுபவ ஞானம்(10)

தன்னையே சதா சர்வ காலமும்

நினைக்கும் தன் பக்தனின்

அறிவு,அறியாமை சாத்திரங்களின்படி  வாழ்வு

ஆகியவற்றை கருத்தில் கொண்டு

அருள் செய்வதில்லை.


புற உலகில் பொருள் தேடி

அலையும் மனிதர்கள் உள்ளத்தில்

இருள்தான் குடியிருக்கும்

இருளை விரட்டும்  ஒளிமயமான ஆத்மன்

இதயத்தில் இருக்கும்போது  அதை

வெளியில் தேடி யாது பயன்?



எண்ணங்களால் நிரம்பிய மனமே

நீ கற்பூரம்போல் முழுவதும்

கரைந்தாலன்றி  பேரொளியும்

நிலையான ஆனந்தம் தரும்

இன்ப ஊற்றாம் இறைவனை

உணர இயலாதென்று  உணர். 

அனுபவ ஞானம்(9)

அனுபவ ஞானம்(9)

பொறாமை குணம் கொண்டோன்

பிறர் வாழ பொறுத்திடான்

தன்னிடம் உள்ளவற்றைக்

கொண்டும் மகிழ்ந்திடான்.

தாழ்வு மனம் கொண்டு

பிறரை அழித்திடவே

சிந்தனை செய்து தானும்

கெட்டு  அழிவான்


தன்னை நினையாமல்

பிறர் நலம் ஒன்றையே

கருத்தில் கொண்டு வாழ்பவன்

இறைவனுக்கு அருகில்

அவனையறியாமலேயே

கொண்டு செல்லப்பட்டு விடுகிறான். 

சனி, 11 நவம்பர், 2017

அனுபவ ஞானம்(8)

அனுபவ ஞானம்(8)

நல்லவர்களுக்கு செவி சாய்க்கா
இவ்வுலக மாந்தர்கள்
தீயவர்களின் கவர்ச்சிக்கு
அடிமையாகி தீராத
துன்பத்தில் மூழ்குவர்.

அளவுக்கதிகமாக உறங்குபவனும்
அளவுக்கதிகமாக உண்பவனும்
அளவுக்கதிகமாக பாசம் வைத்தவனும்
எதற்கும் பயனின்றி மரணத்தை தழுவுவார்கள்
ராமாயணத்தில் வரும் கும்பகர்ணனைப் போல

உனக்கு பிறக்கும் குழந்தை
இறைவன் உனக்காக தயாரித்து
அளிக்கும் வடிவம் என்பதை உணர்.

அது எப்படி வளரும்
எவ்வாறு இருக்கும்
என்ன செய்யும்  என்பதை
அவன் ஒருவனே அறிவான்.

எனவே உங்கள் குழந்தைகளை பற்றி
எந்த கவலையும் கொள்ள வேண்டா.

அவர்களின் நல்ல செயல்களுக்கு
ஊக்கம் மட்டும் அளித்தால் போதும்.
அனைத்தும் நன்றாக இருக்கும்.



அனுபவ ஞானம்(7)

அனுபவ ஞானம்(7)

எல்லா உயிரும் இந்த
உலகில்வாழ விரும்புகின்றன.

அவைகள் இந்த உலகிற்கு
வந்த நோக்கத்தை நோக்கி
தங்கள் கவனத்தை
செலுத்துகின்றன.

அதனால் அவைகளும் வாழ்ந்து
மற்ற உயிர்கள் வாழவும்
உதவியாக இருக்கின்றன. 

ஆனால் மனிதன் மட்டும்
அவன் இவ்வுலகிற்கு வந்த
நோக்கத்தை மறந்துவிட்டு.
பிற உயிர்களுக்கு கேடு
விளைவிப்பதிலேயே
தன் ஆயுள் முழுவதும் வீணடிக்கின்றான்.

அதனால்தான் அவனுக்கு வரும்
துன்பங்கள் எதுவும் தீர்க்க
முடியாத அளவிற்கு இன்று
பெருகிவிட்டது.

தான் செய்த தவறுகளுக்கு
பிறர் மீது பழி போடும் குணம்
அவனுக்கு கை வந்த கலையாகி விட்டது.

இல்லாவிடில் கண்ணுக்கு தெரியாத
கடவுள் மீது வெறுப்பை காட்டி புலம்புகிறான்.

அமைதியாக சிந்தித்தால் புரியும்
தவறு யார் மீது உள்ளது என்று. 

அனுபவ ஞானம்(6)

அனுபவ ஞானம்(6)

பரமனை மறைத்தது

பொன்னும் பொருளும்

பரமன் விரும்புவது

பக்தியும் பொறுமையும்.


உதயத்தில் தோன்றும்

கதிரவனின் ஒளி

நம் உள்ளத்தில் ஒளி வீசும்

ஆன்ம ஒளியின்  பிரதிபலிப்பே

என்று தன்னை உணர்ந்தோர்

கூறும் கூற்றை நம்பு.


மற்ற வழிபாடெல்லாம்.

நினைவிருக்கும் வரையில்தான்.

நினைவிழந்தபின் ஒன்றும் செய்ய இயலாது. 


அனுபவ ஞானம்(5)

அனுபவ ஞானம்(5)

கடமைகளை செய்ய
தவறியவன் என்றும்
காண முடியாது கடவுளை.

கடமைகளை செய்யும்போது
கடவுளை மறப்பவனும்
தன்னை படைத்து
இவ்வுலகில் நடமாடவிட்ட
கடவுளை மறுப்பவனும்
என்றும்  அமைதியாய்
இருக்க முடியாது.

மனதில் அகந்தை கொண்டு 
இறைவனை வெறுத்தால் 
என்ன கிடைக்கும்?

மாலை வெறுப்பவனுக்கு

மால் புகழ் பாடும் மகன் பிறப்பான்.

ஹிரணியகசிபுக்கு பிரகலாதன்

பிறந்ததுபோல் அகந்தையை

வேரோடு அழிக்க.

அனுபவ ஞானம்(4)

அனுபவ ஞானம்(4)

அனுபவ ஞானம்(4)

நாம் வாழும் உலகம்

கதிரவனை காலம் காலமாக

ஒரு நாள் தவறாமல்

சுற்றி வருகிறது.

அதனால் உலகில்

பருவ நிலை மாற்றங்கள்

ஏற்படுகின்றன.

அதுபோல் நாமும்

இறை சக்தி உறையும்

ஆலயங்களை நல்ல

எண்ணங்களுடன்

சுற்றி வந்தால்

நம் வாழ்க்கையிலும் நல்ல

மாற்றங்கள் நிகழும். 

அனுபவ ஞானம்(3)

அனுபவ ஞானம்(3)

தலைவன் தாரணியில்

பிறவியளித்த நோக்கம்

ஆயுளில் பெரும்பகுதி

உறக்கத்தில் கழிப்பதற்கல்ல .


ஆயுள் முழுவதும்

வெட்டிப் பேச்சு  பேசியே முடிவில்

உடலை வெட்டியான் கையில்

கொடுப்பதற்கல்ல.


விழித்திருந்து தான் யார்

என்று அறிவதற்கே

என்று தக்க சமயத்தில்

உணர்த்தினான் குருநாதன்.

குருவின் திருவடிகள் போற்றி. 

இசையும் நானும் (246)-முருகன் பாடல்-கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது பழநியிலே

இசையும் நானும் (246)-முருகன் பாடல்-கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழநியிலே 

mouthorgan vedio-246

தமிழ் பக்தி பாடல்- கலியுக வரதன்
பாடல் வரிகள்- பெரியசாமி தூரன்

கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் 
காட்சியளிப்பது பழநியிலே 

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன் 
மரகத வண்ணனான் திருமால் மருகன் 

கண்ணுதற் கடவுளின் கண்மணியாய்  வந்தான் 
கார்த்திகை பெண்டிர்கள் அணைப்பில் வளர்ந்தான் 

விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான் 

வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான். 



வெள்ளி, 10 நவம்பர், 2017

அனுபவ ஞானம் (2)

அனுபவ ஞானம் (2)


அகந்தை கொண்ட மனத்தால்

அல்லல்பட்டேன் அனுதினம்

கூடியிருப்போரிடம்

குற்றங்களைத்தான் கண்டேன்

குணம் இழந்தேன்

குற்றமெல்லாம் என்னிடம்தான்  என்று

குருநாதன் உணர்த்தியபின்

அகந்தை ஒழிந்து மனம்

அமைதியானேன். 

அனுபவ ஞானம் (1)

அனுபவ ஞானம் (1)

அனுபவ ஞானம் (1)

பழைய வினைகள் பறந்து வந்தது

பயனை தந்ததும் மறைந்து போனது

பரமன் நினைவால் உள்ளம் குளிர்ந்தது

பரம சாந்தி நெஞ்சில் நிறைந்தது. 

புதன், 8 நவம்பர், 2017

இசையும் நானும் (245 )திரைப்படம் -கந்தன் கருணை பாடல்:வெள்ளி மலை மன்னவா



இசையும் நானும் (245)

திரைப்படம் -கந்தன்  கருணை  

பாடல்:வெள்ளி மலை மன்னவா 


MOUTHORGAN
இசை-கே.வி.மகாதேவன்.

வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா?(வெள்ளி) முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா?(முன்னோர்க்கும்)வெள்ளி)
அஞ்செழுத்தும் என்தன் நெஞ்செழுத்தல்லவா? ஐம்புலனும் உன்தன் அடைக்கலமல்லவா? அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? ஆ அஞ்சு நன்னெஞ்சுக்கு ஆறுதல் சொல்லவா? அபாயம் நீக்க வரும் சிவாயமல்லவா?வெள்ளி) வானுலகம் விழுவதென்ன வானவர் தான் அழுவதென்ன(வானுலகம்) சேனை அசுரர் குலம் ஜெயக்கொடி தான் கொள்வதென்ன(சேனை) தேவர் குரல் கேட்டு உன் திருவடியைக் காட்டு அபயக் கரம் நீட்டு உன் அருள் முகத்தைக் காட்டு(தேவர் குரல்) ஆ... வெள்ளி மலை மன்னவா வேதம் நீ அல்லவா? முன்னோர்க்கும் முன்னவா மூண்ட கதை சொல்லவா? வெள்ளி மலை மன்னவா ஆ



சனி, 4 நவம்பர், 2017

இந்த உலகில் எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகில் எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகில் எதற்காக  பிறக்கிறோம்?

இந்த உலகில் எதற்காக பிறக்கிறோம்?

இந்த கேள்வியை யாரும் கேட்பதும் கிடையாது.

கேள்வி கேட்டால் பதில் சொல்ல யாருக்கும் தெரியாது.

ஒரு சிலர் ஏதோ புத்தகங்களை படித்துவிட்டோ  அல்லது
யாரோ கூறியவற்றை மேற்கோள் காட்டி பதில் கூறுவார்கள்.

சாத்திரங்கள் நாம் பிறந்த கணம் முதல் மரணத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு  வருவதாக தெரிவிக்கின்றன

அதனால் இந்த மரணத்திலிருந்து தப்பும் வழியை அறிந்துகொண்டு 
மரணமில்லா பெரு வாழ்வு அடைய முயற்சிக்க வேண்டும் என்று 
கூறுகின்றன. 



சிலர் அதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அதற்கு முயற்சி செய்தவர்கள் எல்லாம் தன்னுடைய சுயநலத்திற்காக இறைவனிடம் வரங்களை மட்டும் நாடி. பெற்று தானும் துன்புற்று பிறரையும் துன்புறுத்தி மாண்டு போனார்கள்.

இதற்கு  முக்கிய காரணம் நாம் நம் மனதில் எழும் எண்ணங்களை மட்டும் நம்பியே நம்முடைய வாழ்க்கையை  நடத்திக்கொண்டு போவதுதான் காரணம்.

அந்த எண்ணங்கள்.தூய்மையாக இருந்தால் நன்மைகள் விளையும்.

தான் என்ற அகந்தையுடன்  கூடி செயல்பட்டால். அதன் பிற விளைவுகளை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த உலக வாழ்க்கை வாழ்வதற்க்கே.அதை அழகாக இனிமையாக வடிவமைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது. 

மரணத்தை பற்றி நாம் எப்போதும் சிந்திக்கவோ அல்லது வருத்தப்படுவதற்க்கோ ஒன்றுமில்லை. அது உறக்கம்போல் நம்மை அறியாமல் நம்மை எப்போது வேண்டுமானாலும்  தழுவிக்கொள்ளும்.


நாம் நம் அகந்தையை முழுவதுமாக விட்டுவிட்டு நம்மை படைத்த அந்த சக்தியிடம் முழுவதுமாக சரணடைந்துவிட்டு. அவரவருக்கு விதிக்கப் பட்ட கடமைகளைமட்டும் செய்து கொண்டிருந்தால்  போதுமென்று பகவான் கண்ணன் கீதையில் அறிவுறுத்தியபடி நம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டால். நம்மை இன்ப துன்பங்கள் பாதிக்காமல் இவ்வுலக பயணத்தை இனிதே நிறைவு செய்யலாம்.

இசையும் நானும் (244) ஹிந்தி திரைப்படம் -சீமா (1955) பாடல்:Tu Pyar Ka Sagar Hai



இசையும் நானும் (244)

ஹிந்தி திரைப்படம் -சீமா (1955)

 பாடல்:Tu Pyar Ka Sagar Hai 


MOUTHORGAN

-

Tu Pyar Ka Sagar Hai Lyrics - Seema (1955)


Movie/album: Seema (1955)
Director: Amiya Chakrabarty
Music Label: Saregama Music
Starring: Nutan, Balraj Sahni, Shobha Khote
Release on: 1st January, 1955



Tu pyaar ka saagar hai
Tu pyaar ka saagar hai
Teri ek boond ke pyaase hum
Teri ek boond ke pyaase hum
Lauta jo diya tune
Lauta jo diya tune
Chale jaayenge jahaan se hum
Chale jaayenge jahaan se hum
Tu pyaar ka saagar hai
Tu pyaar ka saagar hai
Teri ek boond ke pyaase hum
Teri ek boond ke pyaase hum
Tu pyaar ka saagar hai
Ghaayal mann ka paagal panchhi
Udne ko beqaraar
Udne ko beqaraar
Pankh hai komal, aankh hai dhundali
Jaana hai saagar paar
Jaana hai saagar paar
Ab tu hi isse samjha
Ab tu hi isse samjha
Raah bhoole the kahan se hum
Raah bhoole the kahan se hum
Tu pyaar ka saagar hai
Teri ek boond ke pyaase hum
Teri ek boond ke pyaase hum
Tu pyaar ka saagar hai
Idhar jhoomke gaaye zindagi
Udhar hai maut khadi
Udhar hai maut khadi
Koi kya jaane kahan hai seema
Uljhan aan padi
Uljhan aan padi
Kaanon mein zara keh de
Kaanon mein zara keh de
Ke aaye kaun disha se hum
Ke aaye kaun disha se hum
Tu pyaar ka saagar hai
Teri ek boond ke pyaase hum
Teri ek boond ke pyaase hum
Tu pyaar ka saagar hai
Tu pyaar ka saagar hai.