சனி, 5 டிசம்பர், 2015

தவறு செய்தால் தண்டனை உறுதி

தவறு செய்தால் தண்டனை உறுதி 

ஆம் தவறு செய்தால்
தண்டனை உறுதி

வடிநீர் கால்வாய்களில்
நாள்தோறும் குப்பைகளை கொட்டினோம்.
நீர் செல்லும் வழிகளை அடைத்தோம்.

அதனால் வேறு வழியின்றி
கால்வாய்களில் செல்லும் நீர்
வீதிக்கு வந்தது .அப்படியே நம்
வீட்டிற்குள்ளும் புகுந்தது

வீட்டை நரகமாக்கி நாறடித்தது
இனி அவ்வாறு செய்யமாட்டோம் என்று
உறுதி எடுத்துக்கொள்வோமா ?

பயிர் நிலங்கள் நம்மை வாழ  வைக்கும்
உயிர் நிலங்கள் அதில் வீட்டைக்
கட்டினோம் அந்தோ ! இன்று நீர்
சூழ்ந்து கூழ் கூட கிடைக்காமல்
கதறுகின்றோம் -அரசைக் குறை
கூறி  என்ன பயன்?

ஏரி ,குளம், குட்டை எல்லாம்
காணாமல் போயிற்று -பெய்யும் மழை நீர்
தங்க இடம் இல்லாமல் போயிற்று

ஆற்று படுகையிலே வில்லாக்கள்
கட்டினோம். இன்று அனைத்தையும்
இழந்து ஒன்றும் இல்லாமல் தவிக்கின்றோம்.

இனியாவது மனிதர்கள் தாங்கள்
செய்யும் தவறுகளை திருத்தி கொள்ளவேண்டும்

இல்லை யெனில் நாமிருக்க மாட்டோம்
இவ்வுலகில் இவைகளைக் காண. 

1 கருத்து: