மார்கழி சிந்தனைகள் (2)
மார்கழி சிந்தனைகள் (2)
மார்கழி மாதம் பிறந்துவிட்டது
மார்கழி மாதம் ஒவ்வொரு ஆண்டும்
மாலவன் மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது
உலகத்தில் பிறவி எடுப்பது எதற்காக?
அதுவும் மானிட பிறவி எடுப்பது எதற்காக ?
வாழ்வதற்காகத்தான் பிறவி எடுக்கிறோம்.
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
அதுவும் வாழ்வாங்கு வாழ்பவர்கள்தான்
அந்த வாய்ப்பை பயன்படுத்தி வானமும்
பூமியை அளந்த பெருமானையும் அவன்
இதயத்தில் உறையும் அழியா செல்வம்
தரும் ஆனந்தவல்லியையும் தரிசித்து
ஆனந்தம் அடைகிறார்கள்.
மற்றவர் அனைவரும் ஊனை வளர்ப்பதிலும்
உடன் வாராத உடைமைகளைச் சேர்ப்பதிலேயும்
குறிக்கோளின்றி உலகத்தை சுற்றுவதிலேயும்
உறக்கத்திலும், மயக்கத்திலும், திளைத்து
நோயுற்று கவலைகளுக்கு ஆட்பட்டு வீணே
மடிகின்றனர்.
அலைகின்ற மனதை அலைமேல் துயிலும்
அரங்கனின் திருவடிகளில் நிலை நிறுத்த
அதிகாலையில் எழுவோம். அவன் தாள்
பணிவோம்
அன்னவயல் புதுவை
ஆண்டாளின் பாசுரங்களை
அடியார்கள் குழாத்துடன்
கூடி பாடி மகிழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக