புறப்படுவீர் புதியதோர் எதிர்காலம் படைக்க
புறப்படுவீர் புதியதோர்
எதிர்காலம் படைக்க
புலம்பியது போதும்
புறப்படுவீர் புதியதோர்
எதிர்காலம் படைக்க
எங்கிருந்தோ வந்தார்கள்
ஏதும் எதிர்பாராது உணவளித்தார்கள்
தேங்கும் நீர் வெள்ளத்தில் நீந்தி வந்து
நன்றிகள் கோடி அந்த நல்லுள்ளங்களுக்கு
அப்படிப்பட்ட நல்லதோர் பண்பினை
நம்மிடையே வளர்த்திடுவோம்
அதனால் நாம் அனைவரும்
நிச்சயம் நலம் பெறுவோம்.
இயற்கை தன் கடமையை
செய்து முடித்து சென்று விட்டது
இனி நாம்தாம் அவரவருக்கு உள்ள
கடமையை தொடர வேண்டும்.
உடைமைகள் போனால் போகட்டும்
மீண்டும் உழைத்தால் அவைகளை
அடைந்துவிடலாம்
இந்த இக்கட்டில்
நம் உயிர் போகாமல் காப்பாற்றிய
இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.
இரவு பகல் பாராது பாதிக்கப்பட்டவர்களுக்காக
உழைத்த/உழைத்துக்கொண்டிருக்கும்
முகவரி தெரியாத அந்த
பல்லாயிரக்கணக்கான மனிதர்களின்
தொண்டை போற்றுவோம். அவர்களும்
அவர் குடும்பத்தினரும் நலமுடன் வாழ
பிராத்தனை செய்வோம்.
அனைவரும் இணைந்து உழைப்போம்
சுயநலமில்லாது வளமான
எதிர்காலத்தை நோக்கி.நம்பிக்கையுடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக