உள்ளம் என்னும் கோயிலே
உள்ளம் என்னும்
கோயிலே
உடல் என்னும்
கூட்டில் சிக்கிக் கொண்டேன்
உள்ளே வந்து போகும் காற்றினால்
உலகில் அங்குமிங்கும் அலைகின்றேன்
விருப்பு வெறுப்பு என்னும்
நச்சுக் காற்றால் ஒவ்வொரு கணமும்
மாறி மாறி அடைகின்றேன்
இன்பமும் துன்பமும்
இரவும் பகலும் போல்
சோதனைகளும் வேதனைகளும்
நோய்வாய் படுவதால் வரும்
வாதனைகளும் வந்து வந்து
மனம் நொந்து சோர்ந்து போனேன்
உள்ளம் என்னும்
கோயிலே உறைகின்ற
உத்தமனே ,உலகளந்த பெருமானே
உந்தன் பாதம் பணிகின்றேன்
என் உள்ளத்தில்நிலையாய்
என்றென்றும் வீற்றிருப்பாய்
நிம்மதியை தந்திடுவாய் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக