வியாழன், 17 டிசம்பர், 2015

மார்கழி சிந்தனைகள்(3)

மார்கழி சிந்தனைகள்(3)

மார்கழி சிந்தனைகள்(3)

ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் முழுவதையும்
இறை சிந்தனைக்காக ஒதுக்கி பிறவிக் கடலிலிருந்து
நம்மையெல்லாம் மீட்க வழி வகுத்த பெருமை
ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரையே சேரும் .



என்னே அவள் கருணை !

பூமியில் நம்மை பிறக்க வைத்து
நம்மை அன்போடு அரவணைத்து காக்கும்
அன்னை பூமியின் அவதாரமல்லவோ அவள்.!

ஆசையினால் வரும் துன்பங்களை
அறிந்தும் அதை உணராது
ஆசை வயப்பட்டு பூஜைகள் செய்யும்
மனிதர்காள்!

நம்மை ஆட்டுவிக்கும்
ஆடல்வல்லானையும்
நம்முள் ஆன்ம ஒளியாய் உறைந்து,நிறைந்து
நம்மை காக்கும் ஆன்ம ராமனை
ஆலயம் சென்று அவன் வடிவை
வணங்கி இவ்வுலகிலேயே இன்பம் அடைந்து
அந்த நினைவிலேயே வாழ்ந்து முடிவில்
நிலையான அவன் பதத்தை அடைய  வேண்டும்
என்று ஒவ்வொரு பாசுரத்திலும் அழகாக
நமக்கு காட்டிக் கொடுக்கும் அந்த
அன்பு தெய்வத்திற்கு நாம் என்ன கைம்மாறு
செய்யப்போகிறோம் ?

வருத்தம் போக்கும் வழி கிடைத்தபின்
விழிகளை அகல விரித்துக் கொண்டு
அந்த வழியில் சென்று நல்ல கதியை
அடைய நாம் முயலாவிட்டால் நாம்
அறிதற்கரிய அரியின் திருவடிகளை
சிந்திக்காது போனால் நமக்குதான் இழப்பு.





மற்ற பிழைப்பால் பாடுபட்டு சேர்த்த செல்வம்
அனைத்தும் நம் கண்முன்னே வெள்ளம்
அடித்துக்கொண்டு போனதை கண்டபின்னும்
திருந்தாது போனால் மனித பிறவி 
அடைந்து என்ன பயன் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக