புதன், 16 டிசம்பர், 2015

மார்கழி சிந்தனைகள்.(1) மார்கழி சிந்தனைகள்.(1) மார்கழி திங்கள் என்றால் மாரி காலம் முடிந்து மங்கல நிகழ்வுகள் இனி தொடர இருக்கும் காலம் என்றும் அதன் விளைவால் மதியிலே ஒளியும் அதன் பாதிப்பாக உள்ளத்திலே உற்சாகமும் வாழ்விலே வசந்தம் பிறக்கும் என்பது பொருள் வறண்டு போன பூமி திரண்டு வந்த மழை மேகங்களால் நிறைந்து வழிகிறது நீர் நிலைகள் நிரம்பி தளும்புகின்றன பூமி தாய் இவ்வுலக உயிர்கள் வாழ தந்த தாவரங்கள் தன்னிடம் உள்ளதனைத்தையும் அனைவருக்கும் அள்ளித் தர காத்திருக்கின்றன நாமும் அனைத்தையும் நமக்கே என்று சுயநலம் கொண்டு வைத்துக் கொள்ளாமல் மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து இன்பம் அடையும் பண்பை அடைய முயற்சி செய்வோமாக. எங்கும் குளிர்ச்சி .பூத்து குலுங்கும் மலர்களால் உள்ளத்தில் தோன்றுகிறது மகிழ்ச்சி அதனால் அனைவரின் முகத்தில் தோன்றுவது மலர்ச்சி இவைகளுக்கெல்லாம் காரணமான அந்த மாலவனை , மலர் வண்ணனை மாமுகில் வண்ணனை மலரிட்டு பூசித்து ,இனிய அமுது படையலிட்டு வணங்கி அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமோ ! என்பதை நமக்கு உணர்த்தத்தான் பூமித்தாய் தானே ஆண்டாளாக அவதரித்தாள் .போலும்! பாடினால் அவனை எளிதில் பெறலாமே ! என்று வேதங்களின் சாரத்தை நமக்கு தந்தருளிய கோதையின் திருவடிகளை வணங்கி அவள் நமக்களித்த அமுத பாடல்களை பாடி மகிழ்வோம்

மார்கழி சிந்தனைகள்.(1)

மார்கழி சிந்தனைகள்.(1)மார்கழி திங்கள் என்றால்
மாரி காலம் முடிந்து மங்கல
நிகழ்வுகள் இனி தொடர இருக்கும்
காலம் என்றும் அதன் விளைவால்
மதியிலே ஒளியும் அதன் பாதிப்பாக
உள்ளத்திலே உற்சாகமும் வாழ்விலே
வசந்தம் பிறக்கும் என்பது பொருள்

வறண்டு போன பூமி திரண்டு வந்த
மழை மேகங்களால் நிறைந்து வழிகிறது
நீர் நிலைகள் நிரம்பி தளும்புகின்றன

பூமி  தாய் இவ்வுலக உயிர்கள் வாழ
தந்த தாவரங்கள் தன்னிடம்
உள்ளதனைத்தையும் அனைவருக்கும்
அள்ளித் தர காத்திருக்கின்றன

நாமும் அனைத்தையும் நமக்கே என்று
சுயநலம் கொண்டு வைத்துக் கொள்ளாமல்
மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து இன்பம்
அடையும் பண்பை அடைய
முயற்சி செய்வோமாக.

எங்கும் குளிர்ச்சி .பூத்து குலுங்கும்
மலர்களால் உள்ளத்தில் தோன்றுகிறது
மகிழ்ச்சி அதனால் அனைவரின்
முகத்தில் தோன்றுவது மலர்ச்சி

இவைகளுக்கெல்லாம் காரணமான
அந்த மாலவனை ,  மலர் வண்ணனை
மாமுகில் வண்ணனை மலரிட்டு
பூசித்து ,இனிய அமுது படையலிட்டு
வணங்கி அனைவருடனும் பகிர்ந்து
உண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமோ !
என்பதை நமக்கு உணர்த்தத்தான்
பூமித்தாய் தானே ஆண்டாளாக
அவதரித்தாள் .போலும்!பாடினால் அவனை எளிதில் பெறலாமே !
என்று வேதங்களின் சாரத்தை நமக்கு
தந்தருளிய கோதையின் திருவடிகளை
வணங்கி அவள் நமக்களித்த
அமுத பாடல்களை பாடி மகிழ்வோம் 

மார்கழி சிந்தனைகள்.(1)மார்கழி திங்கள் என்றால்
மாரி காலம் முடிந்து மங்கல
நிகழ்வுகள் இனி தொடர இருக்கும்
காலம் என்றும் அதன் விளைவால்
மதியிலே ஒளியும் அதன் பாதிப்பாக
உள்ளத்திலே உற்சாகமும் வாழ்விலே
வசந்தம் பிறக்கும் என்பது பொருள்

வறண்டு போன பூமி திரண்டு வந்த
மழை மேகங்களால் நிறைந்து வழிகிறது
நீர் நிலைகள் நிரம்பி தளும்புகின்றன

பூமி  தாய் இவ்வுலக உயிர்கள் வாழ
தந்த தாவரங்கள் தன்னிடம்
உள்ளதனைத்தையும் அனைவருக்கும்
அள்ளித் தர காத்திருக்கின்றன

நாமும் அனைத்தையும் நமக்கே என்று
சுயநலம் கொண்டு வைத்துக் கொள்ளாமல்
மற்றவர்க்கும் பகிர்ந்தளித்து இன்பம்
அடையும் பண்பை அடைய
முயற்சி செய்வோமாக.

எங்கும் குளிர்ச்சி .பூத்து குலுங்கும்
மலர்களால் உள்ளத்தில் தோன்றுகிறது
மகிழ்ச்சி அதனால் அனைவரின்
முகத்தில் தோன்றுவது மலர்ச்சி

இவைகளுக்கெல்லாம் காரணமான
அந்த மாலவனை ,  மலர் வண்ணனை
மாமுகில் வண்ணனை மலரிட்டு
பூசித்து ,இனிய அமுது படையலிட்டு
வணங்கி அனைவருடனும் பகிர்ந்து
உண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டாமோ !
என்பதை நமக்கு உணர்த்தத்தான்
பூமித்தாய் தானே ஆண்டாளாக
அவதரித்தாள் .போலும்!பாடினால் அவனை எளிதில் பெறலாமே !
என்று வேதங்களின் சாரத்தை நமக்கு
தந்தருளிய கோதையின் திருவடிகளை
வணங்கி அவள் நமக்களித்த
அமுத பாடல்களை பாடி மகிழ்வோம் 

1 கருத்து: