புதன், 29 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (326)-திரைப்படம்-அரசிளங்குமரி – 1961 பாடல்::சின்னப்பயலே சின்னப்பயலே

இசையும் நானும் (326)-திரைப்படம்-அரசிளங்குமரி   – 1961

பாடல்::சின்னப்பயலே சின்னப்பயலே 


MOUTHORGAN VEDIO(326)


Music : ஜி ராமநாதன் 
Singer : டி .எம்.சவுந்தர்ராஜன்-
Lyricist : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா


ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி (ஆளும்)
உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி (ஆசையோடு)
நாளும் ஒவ்வொரு பாடம் கூறும்
காலம் தரும் பயிற்சி
- உன் நரம்போடு தான் பின்னி வளரனும்(- உன்)
தன்மான உணர்ச்சி
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வைய்யடா
தம்பி மனதில் வைய்யடா.(மனிதனாக )

வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கைய்யடா
நீ வலது கைய்யடா (வளர்ந்து)

தனி உடைமை கொடுமைகள் தீர நீ தொண்டு செய்யடா
நீ தொண்டு செய்யடா (தனி உடைமை)

தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்ய்யடா
எல்லாம் பழைய பொய்யடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா


வேப்ப மர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு(வெப்ப)
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க
உந்தன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க


வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை(வேலையற்ற)
வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே நீ
வீட்டிற்குள்ளே பயந்துகிடந்து வெம்பிவிடாதே
நீ வெம்பி விடாதே


சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப் போற வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா
நீ எண்ணிப்பாரடா


1 கருத்து: