சனி, 18 ஆகஸ்ட், 2018

சிந்திக்க சில செய்திகள்(2)

சிந்திக்க சில செய்திகள்(2)

நெஞ்சில் உரம் இல்லாதவன்
வாள் இல்லாத உறையைப் போன்றவன்

இதயத்தில் அன்பில்லாதவன்
உயிர் இல்லாத மிருக தோலினால்
செய்யப்பட்ட பொம்மை போன்றவன்

எட்டிக்காய்  பழுத்தென்ன பயன் ?
பசியாற உதவுமோ?

தனக்கும் பயன்படாது
பிறருக்கும் உதவாது சேமித்து
வைக்கும் செல்வமும் அதுபோலத்தான்

அனைவரும் பிறர் மீது
எப்போதும் குறை காண்பது
அவரவர்களின் குறைகளை
பிறரிடமிருந்து மறைக்கத்தான்.

இந்த உலகத்தில் உண்மையாய்
வாழ்வதற்கு அதற்குரிய விலையை
கொடுத்துதான் ஆகவேண்டும்

ஆனால் பொய் பேசினால் அதற்கான
விலையோடு ரெட்டிப்பு அபராதத்தையும்
சேர்த்து செலுத்தித்தான் ஆகவேண்டும்

இன்பமும் துன்பமும் ஒவ்வொருவர்
வாழ்விலும் தவிர்க்கமுடியாத ஒரு நிகழ்வு..
அது அவரவர் மனதின் நிலையை பொறுத்தது.

ஏன் என்று கேள்வி கேட்பதில்
தவறில்லை?

ஆனால் எதற்கெடுத்தாலும்
ஆராயாமல் கேள்விகள் கேட்டுக்கொண்டிருப்பது
அறிவீனம்.

படிப்பு மட்டும் ஒருவனுக்கு
உயர்வை தராது.

அதோடு நல்ல பண்புகளும்
ஒன்றிணையவேண்டும்.

உடலில் உயிர் இருக்கும் வரை
உறங்கினால் மீண்டும் விழிக்கலாம்

உடலைவிட்டு உயிர் நீங்கினால்
அதே உடலில் மீண்டும் விழிக்க முடியாது.

அதனால் எதை செய்ய வேண்டுமென்று நினைத்தாலும்
அதை செய்துவிட்டு உறங்க செல்வதுதான் நலம்.

அதனால்தான் நாளை என்று
நல்ல செயல்களை தள்ளிப் போடுவது
நடக்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம்.



2 கருத்துகள்:

  1. அருமை.

    நேற்று என்பது உடைந்த பானை. நாளை என்பது மதில்மேல் பூனை. இன்று என்பது நம் கையில் உள்ள வீணை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று என்பதுகூட சரியல்ல. இந்த நொடி என்பதே சரியாக இருக்கும்.

      நீக்கு