செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்


இசையும் நானும் (321)-(முருகன் பாடல்கள்) பாடல்::ஓராறு முகமும் ஈராறு கரமும்

MOUTHORGAN VEDIO(321) 

 பாடல் வரிகள்-வாலி 
பாடியவர்-- டி .எம் .சவுந்தரராஜன் 



ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்

(ஓராறு)

ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்

(ஓராறு)

சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த

(ஓராறு)

மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
(ஓராறு)

Image courtesy-google-images 







6 கருத்துகள்:

  1. என்ன தொடர்ந்து பக்திப் பாடல்கள்?

    கேட்டேன், ரசித்தேன். சற்று மெதுவாக இசைத்திருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் வழக்கம்போல்தான் இசைத்திருக்கிறேன். கணினியில் பாடலின் வேகத்தை மாற்றியிருக்கிறேன்.அவ்வளவுதான்.ஹிந்தி பாடல்களை தேடிக்கொண்டிருக்கிறேன் சிக்கவில்லை. மேலும் 15நாட்களாக வலது கை தோள்பட்டை வலி. மருத்துவர் அறுவை சிகிச்சை என்று பயமுறுத்தினார். நான் ஏதாவது மாத்திரை கொடுங்கள் போதும் என்றேன். கையை அதிகம் அசைக்கக்கூடாது. பளு தூக்கக்கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார். 10000 செலவு நிவாரணம் ஒன்றும் இல்லை. போதாக்குறைக்கு இடது கால் மூட்டு வலி. உயிரை வாங்கிக்கொண்டிருக்கிறது.unable to sit ,stand or walk. energy level down

      நீக்கு
  2. தோள்பட்டை வலியா? கையைத் தூக்கி வாசிப்பதில் சிரமம் இருக்குமே.. எனக்கும் இடது முழங்காலில் பிரச்னை உண்டு. உங்கள் தோள்பட்டை வலியும், கால் வலியும் சீக்கிரம் குணமாகப் பிரார்த்திக்கிறேன். ஒய்வு எடுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓய்வு ?அது மட்டும் என்னால் முடியாது. .தொடர்ந்து போராடுவதே என் பிறவிக் குணம். உங்களின் ஆறுதல் வார்த்தைகள் அந்த ஆறுமுகனின் குரலாகவே நான் உணர்கிறேன்.எத்தனையோ வலிகளைக் கடந்து வந்த நான். இதையும் ஓய்வு கடந்துவிடுவேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எனக்கு உண்டு .இசை ஒன்றுதான் தற்போது எனக்கு இருக்கும் ஒரே பற்றுக்கோடு. படித்தால் கண் வலிக்கிறது.படிப்பதை நிறுத்திவிட்டேன். எழுதுவதையும் நிறுத்திவிட்டேன். படங்கள் வரைவதையும் விட்டுவிட்டேன். விடாமல் கையில் பிடித்துக்கொண்டிருப்பது. மவுத்தார்கன் மட்டும்தான். அதற்கும் இறைவன் செக் வைக்கின்றான். நான் என்ன செய்ய? இந்த வலியிலும் 4 பாடல்களை வெளியிட்டுவிட்டேன். 1000 பாடல்களை வெளியிடும்வரை ஓயமாட்டேன். நீங்கள் மட்டும் தொடர்ந்து எனக்கு ஊக்கம் அளியுங்கள். அது போதும் எனக்கு.

      நீக்கு
    2. நெகிழ்ச்சியாக இருக்கிறது. உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் இலக்கை சீக்கிரமே எட்டி விடுவீர்கள்.

      நீக்கு
    3. நன்றி.இது ஒன்றேபோதும். அடுத்த பாடலுடன் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்.

      நீக்கு