வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

இசையும் நானும் (322)-திரைப்படம்-காத்திருந்த கண்கள் -1962 பாடல்::காற்று வந்தால் தலை சாயும்



இசையும் நானும் (322)-திரைப்படம்-காத்திருந்த கண்கள்      -1962

பாடல்::காற்று வந்தால் தலை சாயும்

 

MOUTHORGAN VEDIO(322)



பாடகி : பி.சுசீலா 
பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்கள் : எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண் : { காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம் } (2)
ஆண் : ஆற்றினிலே கரைபுரளும்
பெண் : வெள்ளம்
ஆண் : ஆசையிலே கரை புரளும்
பெண் : உள்ளம்
பெண் : ஆடை தொட்டு விளையாடும்
ஆண் : தென்றல்
பெண் : ஆசை தொட்டு விளையாடும்
ஆண் : கண்கள்
பெண் : ஒருவர் மட்டும் படிப்பதுதான்
ஆண் : வேதம்
பெண் : இருவராக படிக்க சொல்லும்
ஆண் : காதல்
ஆண் : காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம்
பெண் : { மழை வருமுன் வானை மூடும்
ஆண் : மேகம்
பெண் : திருமணத்துக்கு முன் மனதை மூடும்
ஆண் : மோகம் } (2)
பெண் : ஓடி வரும் நாடி வரும் உறவு
கொண்டு தேடி வரும்
உயிர் கலந்து சேர்ந்து விடும்
ஆண் : மானும்
பெண் : பாடி வரும் பருவ முகம் 
பக்கம் வந்து நின்றவுடன்
பாசத்தோடு சேர்ந்து கொள்வேன்
ஆண் : நானும்
பெண் : நானும்
ஆண் : நானும்
ஆண் : காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம்
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆண் : { அஞ்சி அஞ்சி நடந்து வரும்
பெண் : அன்னம்
ஆண் : அச்சத்திலே சிவந்து விடும்
பெண் : கன்னம் } (2)
ஆண் : கொஞ்சிவரும் வஞ்சி முகம் கோபுரத்து
கலசமென அந்தி வெயில் நேரத்திலே
பெண் : மின்னும்
ஆண் : மின்னி வரும் நேரத்திலே மேனி
கொண்ட பருவத்திலே முன்னிருந்தால் தோற்று விடும்
பெண் : பொன்னும்
ஆண் : உள்ளம்
பெண் : துள்ளும்
ஆண் : காற்று வந்தால் தலை சாயும்
பெண் : நாணல்
ஆண் : காதல் வந்தால் தலை சாயும்
பெண் : நாணம்
ஆண் & பெண் : ஆஹா
ஹாஹா ஆஆ ஆஹா
ஹாஹா ஆஆ ஹா

2 கருத்துகள்:

  1. கேட்டேன், ரசித்தேன்.

    மிக நன்றாய் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயற்சியில்லாது முயற்சிகள் தொடரும் இலக்கை நோக்கி.

      நீக்கு