வெள்ளி, 26 ஜனவரி, 2018

இசையும் நானும் (273) திரைப்படம் -சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) பாடல்:சொல்லத்தான் நினைக்கிறேன்

இசையும் நானும் (273)  

திரைப்படம் -சொல்லத்தான் நினைக்கிறேன் (1973)

பாடல்:சொல்லத்தான் நினைக்கிறேன் 





MOUTHORGAN
 VEDIO-273



Song : Sollathan Ninaikiren
Movie : Sollathan Ninaikiren (1973)
Singers : M.S. Viswanathan, S. Janaki
Music : M.S. Viswanathan
Lyricist : Kannadasan
Direction : K. Balachandar










சொல்லத்தான் நினைக்கிறேன் 
உள்ளத்தால்  துடிக்கிறேன்
வாயிருந்தும் சொல்வதற்கு 
வார்த்தையின்றி தவிக்கிறேன் .ஆ. ஆ. (சொல்லத்தான்) 

காற்றில் மிதக்கும் புகை போல  
அவன் கனவில் மிதக்கும் நினைவுகளே...(2)
மன வீடு அவன் தனி வீடு 
அவன் வருவானோ நெஞ்சில் நிறைவானோ 
அவன் வருவானே எங்கும் நிறைவானே  ஆ. ஆ. (சொல்லத்தான்) 

காதல் என்பது மழையானால் 
அவள் கண்கள் தானே கார்மேகம் (2)
நீராட்ட நான் தாலாட்ட 
அவள் வருவாளோ இல்லை மாட்டாளோ 
அவள் வருவாளே சுகம் தருவாளே 

ஆசை பொங்குது பால் போலே 
அவள் அனல் போல் பார்க்கும் பார்வையிலே (2)
கொதித்த மனம் கொஞ்சம் குளிரும் விதம் 
அவன் அணைப்பானோ என்னை நினைப்பானோ 
அவன் அணைப்பானே என்றும்  நினைப்பானே ஆ. ஆ. (சொல்லத்தான்) 

நேரில் நின்றான் ஓவியமாய் 
என் நெஞ்சில் நின்றான் காவியமாய் ..(2)
நான் பாதி அவள்தான் பாதி என கலந்தாளோ 
கண்ணில் மலர்ந்தாளோ 
நெஞ்சில் கலந்தாளே  கண்ணில் மலர்ந்தாளே ஆ. ஆ. (சொல்லத்தான்) 




செவ்வாய், 23 ஜனவரி, 2018

இசையும் நானும் (272) திரைப்படம் -புதையல் – 1957 பாடல்:விண்ணோடும் முகிலோடும் விளையாடும்

இசையும் நானும் (272)  

திரைப்படம் -புதையல்  – 1957

பாடல்:விண்ணோடும் முகிலோடும்  விளையாடும்


MOUTHORGAN
 VEDIO-272


Movie Name : புதையல்  – 1957
Song Name : விண்ணோடும் முகிலோடும்  விளையாடும் 
Music : விஸ்வநாதன்-ராமமூர்த்தி 
Singers : CS ஜெயராமன்  P சுசீலா 
Lyricist : MK ஆத்மநாதன் 


Female :
விண்ணோடும் முகிலோடும்  
விளையாடும் வெண்ணிலவே (2)

கண்ணோடு கொஞ்சும் கலையழகே 
இசையமுதே ,இசை அமுதே..
விண்ணோடும் முகிலோடும்  
விளையாடும் வெண்ணிலவே 

Male :
அலை பாயும் கடலோரம் 
இள மான்கள் போலே (2)
விளையாடி..


Female : இசை பாடி 
Both :
விழியாலே உறவாடி 
இன்பம் காணலாம் 
Male :
விண்ணோடும் முகிலோடும்  
விளையாடும் வெண்ணிலவே
Female :
கண்ணோடு கொஞ்சும் கலையழகே 
இசையமுதே ,இசை அமுதே.
Both :
விண்ணோடும் முகிலோடும்  
விளையாடும் வெண்ணிலவே
~~@@~~ BG Music ~~@@~~
Male :
தேடாத செல்வ  சுகம் 
தானாக வந்ததுபோல் 
ஓடோடி  வந்த சொர்க்க போகமே (2)

Female :
காணாத இன்ப நிலை 
கண்டாலும் நெஞ்சினிலே 
ஆனந்த போதையூட்டும் 
யோகமே வாழ்வினிலே 
விளையாடி 

Male : இசை பாடி 
Both :
விழியாலே உறவாடி 
இன்பம் காணலாம் 
விண்ணோடும் முகிலோடும்  
விளையாடும் வெண்ணிலவே
~~@@~~ BG Music ~~@@~~
Male :
சங்கீத தென்றலிலே 
சதிராடும் பூங்கொடியே 
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே(2) 

Female :
மங்காத தங்கமிது 
மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் 
பாடுதே வாழ்விலே 
விளையாடி 

Male : இசை பாடி 
Both :
விழியாலே உறவாடி 
இன்பம் காணலாம் 
Female :
ஆ ..ஆ.. ஆஅ...
Both : 
விண்ணோடும் முகிலோடும்  
விளையாடும் வெண்ணிலவே (2)

கண்ணோடு கொஞ்சும் கலையழகே 
இசையமுதே ,இசை அமுதே..
விண்ணோடும் முகிலோடும்  
விளையாடும் வெண்ணிலவே 



ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பகவத் கீதையில் கண்ணன்...

பகவத் கீதையில் கண்ணன்...
bhagavath geetha images માટે છબી પરિણામ

மஹா பாரத போர் தொடங்க இருக்கிறது...

பகவான் கண்ணன் தேரை கவுரவர்கள்
படையை நோக்கி தேரை செலுத்த தொடங்குகிறான்.

அர்ச்சுனன் உடனே தேரை நிறுத்து என்று
கண்ணனுக்கு ஆணையிடுகிறான்.

தேரை இரு படைகளுக்கும் நடுவிலே நிறுத்து என்கிறான்

கண்ணன் கேட்கிறான்.ஏன் போரை தொடங்க இருக்கும் நேரத்தில்
தேரை நிறுத்து என்கிறாயே  ஏன் ? என்று அர்ச்சுனை பார்த்து
பார்த்தன் கேட்கிறான்.

அர்ச்சுனன் கூறுகிறான். எனக்கு போர் செய்ய பிடிக்கவில்லை
நான் என்குருமார்களையும், என்னுடைய மதிப்பிற்குரிய
நம் குடும்ப  பெரியவர்களையும் கொண்டு அதனால் அடையப்போகின்ற
ரத்தகறை படிந்த வெற்றி  தேவையில்லை. நான் போரிலிருந்து
விலகிவிடுகிறேன் என்று பிதற்றுகிறான்.

போர் ஏற்படாமல் இருக்க மேற்கொண்ட அனைத்து  முயற்சிகளும்
கைவிடப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் போர் செய்ய முடிவு செய்த நிலையில் அர்ச்சுனனின் இந்த மயக்கத்தை பேடித்தனம் என்று பகவான் கேலி செய்கிறான்.

அவனின் மயக்கத்தால் வரும் விளைவுகளை அவனுக்கு விளக்கி
அவன் அறியாமையை விலக்கி அவனுக்கு ஒரு தெளிவை உண்டாக்கி அவன் கடமையை மட்டும் உண்மையாக செய்து விளைவுகளை இறைவனிடம் விட்டுவிடுமாறு அறிவுறுத்தியதுதான் பகவத்கீதை.

வள்ளுவனும் "எண்ணி துணிக கருமம்" என்றான். துணிந்த பின்
பின் வாங்குவது இழிவான செயல் என்று தன் குறளில் குத்திக்  காட்டினான்.

பல ஆய்வுகளுக்கு பிறகு ஒரு செயலை செய்து முடிக்கவேண்டும் என்று முடிவு செய்தபின்  எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இழப்புகள் வந்தாலும் அதை எதிர்கொள்ளாமல் அதிலிருந்து பின்வாங்குவது கோழைத்தனம்

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனுக்கும் பொதுவான சில கடமைகளும்
மற்றும் அவன் தேர்ந்தெடுத்த வேலை அல்லது தொழில் தொடர்பான கடமைகளும் உண்டு.

அதிலிருந்து யாரும் பின் வாங்க முடியாது. அப்படி செய்தால் அவர்கள்
உலகத்தாலும் தான் சார்ந்துள்ள சமூகத்தாலும் வசை பாடப்பட்டு, எள்ளி  நகையாடப்பட்டு தீரா பழிக்கும், அவமானத்திற்கும்  உள்ளாவார்கள்.

அதைவிட நம் நாட்டை காக்கும் போர் வீரர்கள்போல் தன்   கடமையை செய்து
அவர்கள் உயிரை இழந்தாலும் அனைவராலும் போற்றப்படும் புகழை அடைவதுபோல் அனைவரும் அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட அல்லது ஏற்றுக்கொண்ட பணியினை சிறப்பாக,உண்மையாக செய்வதே நலம் பயக்கும் என்பது பகவான் தெரிவிக்கும் உண்மை. 

அனைவருக்கும் பொதுவான இந்த உண்மை ஜாதி, மதம்,இனம் கடந்து அனைவருக்கும் பொதுவானது.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. 

வெள்ளி, 19 ஜனவரி, 2018

இறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்?

இறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும்?

இறைவனை நாம் ஏன் வணங்க வேண்டும். ?

நாம் எல்லோரும் மற்றொரு உயிருக்கு
இரையாக போக படைக்கப்பட்டவர்கள்.

எறும்புகளை பிடித்து தின்னும்
பிராணிகள்  அந்த பிராணி இறந்தவுடன்
அதன் உடல்கள் அந்த எறும்புகளுக்கே
உணவாகி போகும்.

மனிதர்களின் நிலையும்  அதேதான்.

மனிதன் தன்னை சுற்றி, நம்மை அண்டி வாழும்
அனைத்து  உயிர்களையும் கொன்று தின்று
தன் உடலை வளர்க்கின்றான் .

முடிவில் அவன் மரித்ததும்  அவன் உடல்
பலவிதமான உயிரினங்களுக்கு உணவாகி  போகிறது.

உடல் மண்ணுக்கு போகிறது.
அவன் உடலில் இருந்த உயிர் விண்ணுக்கு போகிறது.
மீண்டும் மண்ணுக்கு வர.

இது தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

இதற்க்கு ஒரு முடிவு கட்ட வேண்டாமா?

அதற்க்கு நாம் மற்ற உயிரினங்களுக்கு இரையாக படைத்த
அந்த சக்தி எது என்பதை உணர்ந்து அந்த இழி நிலையிலிருந்து
விடுபடவேண்டாமா?

அந்த சக்திதான் இறைவன்.

அந்தஇறைவன் வேறெங்கும் இல்லை.

நமக்குள்ளேயே இருக்கிறான்.

அமைதியாக உள்ளத்தில் உள்ள எல்லா எண்ணங்களையும் சிறிது நேரம்
ஓரம் கட்டி வைத்து அமைதியாக அவன் குரலை கேட்டால் போதும்.

எல்லாம் விளங்கும். விடுதலையும்  கிடைக்கும்.

எப்போதும் வெளியே நாய் போல் ஓடிக்கொண்டிருக்கும் மனதை
உள்ளே திருப்புங்கள்.

உங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும்.

இறைவன்  இல்லை ன்று கூச்சல் போட்டுக்கொண்டிருப்பவர்கள் அவர்களின் மூச்சு நிற்கும் வரை. குரைத்துக் கொண்டிருக்கட்டும். பிறர் மீது குறைகளை வாரி இறைத்துக்கொண்டிருக்கட்டும்.



வியாழன், 18 ஜனவரி, 2018

இசையும் நானும் (271) திரைப்படம் -குங்குமம் (1963) பாடல்:தூங்காத கண் என்று ஒன்று


இசையும் நானும் (271)  

திரைப்படம் -குங்குமம்  (1963)


பாடல்:தூங்காத கண் என்று ஒன்று


MOUTHORGAN

 VEDIO-271


Song : Thoongaatha kanendru Ondru
Movie : Kungumam (1963)
Singers : T.M. SOUNDARARAJAN, P. SUSHEELA
Music : K.V. MAHADEVAN
Lyricist :
Direction : PANJU ARUNACHALAM
Singers :

 T.M. Soundararajan and P. Susheela
Music by : K.V. Mahadevan
Female : தூங்காத கண் என்று ஒன்று 
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று 
தாங்காத மனம் என்று ஒன்று 
தந்தாயே நீ என்னைக் கண்டு 

Male : (தூங்காத)

Female : தூங்காத கண் என்று ஒன்று
Male : முற்றாத இரவொன்றில் நான் வாட
முடியாத கதை ஒன்று நீ பேச (2)
Female : உற்றாரும் காணாமல் 
உயிரொன்று சேர்ந்தாட 
உண்டாகும் சுவை என்று ஒன்று (2)(தூங்காத)

Female : யார் என்ன சொன்னாலும் செல்லாது 
அணை  போட்டு தடுத்தாலும் நில்லாது (2)
Male : தீராத விளையாட்டு திரை போட்டு விளையாடி 
நாம் காணும் உலகென்று உண்டு  (2)
Female : தூங்காத கண் என்று ஒன்று
Male : வெகு தூரம் நீ சென்று நின்றாலும் 
உன் விழி மட்டும் தனியாக வந்தாலும் (2)
Female : வருகின்ற விழியொன்று தருகின்ற பரிசென்று 
பெறுகின்ற சுகமென்று ஒன்று (2)
Male : தூங்காத கண் என்று ஒன்று 
துடிக்கின்ற சுகம் என்று ஒன்று 
தாங்காத மனம் என்று ஒன்று 
தந்தாயே நீ என்னைக் கண்டு 

Male : (தூங்காத)

சனி, 13 ஜனவரி, 2018

அண்ணாமலையின் பக்தர்களும் ஆண்டாளின் பக்தர்களும் !


அண்ணாமலையின்  பக்தர்களும் 
ஆண்டாளின் பக்தர்களும் !

சில  வாரங்களுக்கு முன்பு 
ஒரு செய்தி வந்தது.

tiruvannamalai karthigai deepam માટે છબી પરિણામ

அண்ணாமலை கோயிலை 
வெடி வைத்து தகர்ப்போம் என்று ஒருவர் 
கோயில் நிர்வாகத்திற்கு தொலைபேசி வாயிலாக 
மிரட்டல் விடுத்தார் என்று ஒரு அரசியல் கட்சியின் தலைவர். 
ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.

ஆனால் அண்ணாமலை கோயிலுக்கு பவுர்ணமிதோறும் 
கிரிவலம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களில்  ஒருவர் கூட 
இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. 

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை  தீபத்தன்று 
பல லட்சக்கணக்கில் கூட்டம் கூடி 
அண்ணாமலைக்கு அரோகரா என்று கூவி   போய்விட்ட 
ஒரு காக்கையும் அன்றே  ஒரு கண்டனத்தை  கூட பதிவு செய்ய வில்லை. 


காரணம் அவர்கள் அங்கு செல்வது அண்ணாமலையாரிடம் 
சுயநலம் தொடர்பான வேண்டுதலை செய்ய மட்டும்தான் என்பது 
தெள்ள தெளிவாகிவிட்டது. 

அண்ணாமலையார் எப்படி போனால் என்ன
என்ற மனோபாவம் போலும். !

வலிமையையும்  செல்வ  செழிப்பும் மிக்க அண்ணாமலையாரின் பக்தர்கள்மவுனமாக இருந்துவிட்டனர் 


ஆனால் வயதான ,உடல் வலிமையற்ற,வன்முறையில் நம்பிக்கையில்லாத ஆண்டாளின் பக்தர்கள் அவர்கள் 
 தெய்வமாக போற்றும் ஆண்டாள் நாச்சியாரை பற்றி அவதூறு பேசப்பட்டதை தொடர்ந்து இன்று வீதியில் இறங்கி எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்வது. வியக்க வைக்கிறது. 


இதுதான் உண்மையான பத்தியின்  வெளிப்பாடு.

அவரவர்கள் அவரவர்களின் கலாச்சாரத்தை அனுசரிக்க அரசியல் சட்டம் அனுமதித்திருக்கிறது. 

ஆனால் சிலர் வேண்டுமென்றே மற்றவர்களின் வாழ்க்கை நெறிகளில் மூக்கை நுழைத்து கருத்து சொல்வதும் எள்ளி   நகையாடுவதும் தொடர்ந்து கொண்டு வருகிறது. 

இந்த போக்கு தவிர்க்கப்பட வேண்டும். 

இதற்காக  யாரும் வன்முறையில் ஈடுபடுவது.தேவையற்றது 

அந்த சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளி, 12 ஜனவரி, 2018

மார்கழி சிந்தனைகள்

மார்கழி சிந்தனைகள்

மார்கழி சிந்தனைகள்

ஓங்கி உயர்ந்து வளர்ந்த மரங்கள்
கதிரவனின் வெப்பத்திலிருந்து
நமக்கு நிழல் தருகின்றன

அதன் இலைகளோ உயிர்கள்  வெளிவிடும்
நச்சுக் காற்றை உட்கொண்டு நம்மை வாழ
வைக்கும் பிராண வாயுவை நமக்கு
தருகின்றன

தாவரங்களின் அனைத்து  பகுதிகளும்
இந்த உலகில் அனைத்து உயிர்களும்
இன்பமாக வாழ தங்களின் வாழ்நாள்
முழுவதையும் அர்ப்பணிக்கின்றன.

ஆனால் மனிதர்கள் மட்டும் தங்களிடம்
உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழும்
எண்ணத்தை வளர்த்துக் கொள்வது
கிடையாது.

மாறாக எல்லாம் தனக்குத்தான் என்று
இறுமாப்பு கொண்டு கஞ்சனாய்
திகழ்ந்து ,காசேதான் கடவுள் என்று
அலைகிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மூலகாரணன் அந்த
உலகளந்த உத்தமன் தான் என்பதை
வசதியாக மறந்து அவனை வாழ்த்தி
வணங்காது அவன் தரும் அனைத்து
சுகங்களையும் பெற்றுக்கொண்டு
நன்றி மறந்து அவன் மீது
வசை பாடுவதிலேயே குறிக்கோளாக
இருக்கின்றனர்.

அதன் விளைவுதான் அகந்தை கொண்டு
அடாவடித்தனம் செய்த மக்களுக்கும்
இறைவன் கொடுத்த தண்டனை.

இன்று குடிக்க சுத்தமான நீரில்லை.
சுவாசிக்க சுத்தமான காற்று இல்லை.
குடிநீரும் ,காற்றும், மண்ணும் நஞ்சாக
மாறிவிட்டன .ஆனால். மனிதர்கள்
தங்கள் தவறை உணர மறுக்கிறார்கள்.


ஆனாலும் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள
மறுக்கின்றனர். நடந்து முடிந்த
நிகழ்வுகளுக்கு யார் காரணம் என்று
பட்டி மன்றம் நடத்தி ஒருவர் மீது
ஒருவர் வசை பாடிக்கொண்டிருக்கின்றனர்.





அனைத்தையும் படைத்தவனை
மறந்துவிட்டார்கள்.

அவன் நாம் நலமாக வாழ
வகுத்து தந்த நெறிகளை புறந்  தள்ளி விட்டார்கள்.
இன்று வீணே புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வசை பாடுவதை விட்டு விட்டு ஆண்டாள்
அருளிய திருப்பாவை பாடல்களை பக்தியுடன்
இசைத்தால் போதும் இழந்ததனைத்தும்  கிடைக்கும்.
பொங்கும் மங்கள வாழ்வும் மலரும். 

கோதையே நீ என்றென்றும் வாழி !

கோதையே நீ என்றென்றும் வாழி !

கோதையே நீ என்றென்றும் வாழி !

સંબંધિત છબી

வேதம் அனைத்திற்கும் வித்தாகும்
கோதை  நமக்களித்த திருப்பாவை

அந்த திருப்பாக்களை பக்தியுடன்
அனுதினம் பணிந்தேத்துவோர்க்கு
பாதகங்கள் தீரும் ,பரமன் அருள்  கிட்டும்.

ஆறடி குழியில் அடங்குவதற்கு முன்
தந் திருவடியால் மூவடி மண் அளந்த
உத்தமனின் திருவடியை வணங்கி
உய்யும் வழியை நமக்கு காட்டி
கொடுத்தவள்   அன்னை ஆண்டாள்.

பத்து  மாதம் மீண்டும் ஒரு தாயின்
வயிற்றில் தங்கி மீண்டும் இவ்வுலகில்
பிறந்து அல்லல்படவேண்டாம்
என்பதற்காக மார்கழி மாதத்தை
பரமனை துதித்துபாடி கடைத்தேறும்
மாதமாக அறிவித்தாள்

நம்மையெல்லாம்  வாழ வைக்க வந்த 
மண்    மடந்தையின் அம்சம் கோதை  என்று
போற்றி துதிக்கிறது பக்தர் கூட்டம்

பக்தியின்  மாண்பறியாத பதர்கள்  கூட்டமோ
அவளை  யாரோ பெற்றெடுத்து
மண்ணில் வீசிய பேதை என்று பிதற்றுகிறது..
எல்லாம் அவரவர் எண்ணப்படியே.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்
என்றான்  வள்ளுவன்.

நெருப்பென நின்ற நெடுமாலை
கோதை சூடி கொடுத்த மாலையை
அன்போடு ஏற்று அருள் செய்த
அரங்கனையும் அவள் அடியாளாகிய
ஆண்டாளை மட்டுமே நினைவில் வைப்போம்.
மற்ற குப்பைகளை மனதில் இருந்து நீக்குவோம்.

இரவும் பகலும் ஒளி வீசும் சூரிய நாராயணன்
அரங்கனின் ஒளி அன்னை ஆண்டாள்.

அதன் முன் சில மணி நேரங்களே வாழ்ந்து
இரவில்  மட்டும் சிறு ஒளியில் இரைதேடி 
கூற்றுவனின் வாயில் விழுந்து
காணாமல் போகும்  மின்மினி பூச்சிகள் 
என்ன செய்ய முடியும் ?

உணர்ச்சிகள் வந்த வேகத்திலேயே 
காணாமல் போகும்.

ஆனால் உணர்வுகள் அழியாது.
அது ஆலயத்தினுள்  அரங்கன் 
முன்னே எரியும் தீபம்போல் 
ஒளி வீசிக்கொண்டிருக்கும். 

સંબંધિત છબી

இதயம் என்னும் அரங்கத்தில் 
அரங்கனை வைப்போம்
அவனுடன் கலந்துவிட்ட அந்த 
கோதையையும் சேர்த்து. . 

இசையும் நானும் (270) திரைப்படம் -பாக்கிய லட்சுமி (1961) பாடல்:மாலைப்பொழுதின் மயக்கத்திலே



இசையும் நானும் (270)  

திரைப்படம் -பாக்கிய லட்சுமி (1961)


பாடல்:மாலைப்பொழுதின் மயக்கத்திலே


MOUTHORGAN

 VEDIO-270


பாக்கிய லட்சுமி



Heroஜெமினி கணேசன் & சௌகார் ஜானகி 
Music Directorஎம். எஸ்.விஸ்வநாதன்/ராமமூர்த்தி 
LyricistKannadasan
Singersபி. சுசீலா 
Year1961


மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?

ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
இன்பம் சிலநாள் துன்பம் சிலநாள்
என்றவர் யார் தோழி?
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி?
காண்பது ஏன் தோழி?
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி
மணமுடித்தவர் போல் அருகினிலே
ஓர் வடிவு கண்டேன் தோழி
மங்கையின் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார்
உடனே மறந்துவிட்டார் தோழி
பறந்துவிட்டார் தோழி..
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி
கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவரென்றால் அவர் கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி


இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சிலகாலம்
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது
மயங்குது எதிர்காலம்.. மயங்குது எதிர்காலம்..
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோ...ழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி?
காரணம் ஏன் தோழி?
ஆ.. மாலைப்பொழுதின் மயக்கத்திலே
நா...ன் கனவு கண்டேன் தோ...ழி



புதன், 10 ஜனவரி, 2018

ஆலயம் இல்லா ஊரில்...

ஆலயம் இல்லா ஊரில்...

ஆலயம் இல்லா ஊரில்...


ஆலயத்தில் இருக்கும்
இறைவனின் திருவடிவம்
ஆனந்தம் தருகிறது
அவனை அன்போடு
வணங்கி
வந்தாலே அமைதி பிறக்கிறது
உள்ளத்தில் அமைதி பிறக்கிறது. (ஆலயத்தில்)
સંબંધિત છબી
ஆலயம் இல்லா ஊரில்
குடியிருக்க வேண்டாமென்று
அவ்வை சொன்னாளே

அதுபோல் நம் உடல்  என்னும் கோட்டையில்
இதயத்தில் இறைவனை
 குடி வைக்காவிடில்
அது பேய்கள் திரியும் காடே  (ஆலயத்தில்)

இன்னல்கள் சூழ்ந்த
இவ்வுலகில் நமக்கு
துணையாய் வருவது
இறைவனின் திருவருளே

அவனை அன்புடன் பூஜித்து
உள்ளத்தில் அவனை என்றும்
மறவாது இருந்தால்  போதும்
வாழ்க்கை பயணம்
இனிதாகுமே  என்றும்
நம்  வாழ்க்கை பயணம்இனிதாகுமே (ஆலயத்தில்)

செவ்வாய், 9 ஜனவரி, 2018

இசையும் நானும் (268) HINDI FILM-திரைப்படம் PARICHAY (1972) பாடல்:Musafir hoon yaaron na ghar hai na tikhana

இசையும் நானும் (268)  

HINDI FILM-திரைப்படம் PARICHAY (1972)



பாடல்:Musafir hoon yaaron na ghar hai na tikhana


PARICHAY (1972)



Song : Musafir Hoon Yaaron
Music : R D Burman
lyrics : Gulzar
Singers : Kishore Kumar


Musafir hoon yaaron na ghar hai na tikhana
Hm hm he
Musafir hoon yaaron na ghar hai na tikhana
Mujhe chalte jaana hai bas chalte jaana

Ek raah rukh gayi tho aur judh gayi
Main mura tho saath saath raha murgayi
Hawaon ke paron par mera ashiana
Musafir hoon yaaron na ghar hai na tikhana
Mujhe chalte jaana hai bas chalte jaana

Din ne haath thaam kar idhar bithaliya
Raat ne ishaare se udhar bulahliya
Subah se shaam se mera dostana
Musafir hoon yaaron na ghar hai na tikhana 
Mujhe chalte jaana hai bas chalte jaana 
Musafir hoon yaaron na ghar hai na tikhana
Mujhe chalte jaana hai bas chalte jaana