சனி, 8 ஆகஸ்ட், 2015

ராம நாமம் சொல்லுவோம்

ராம நாமம் சொல்லுவோம் 

ராம நாமம் சொல்லுவோம் 
நாம் வாழும் இவ்வுலகம் நலம் பெற 


உண்மை அன்பும் பண்பும் பரிவும் பாசமும் 
இவ்வுலகை விட்டு என்றோ அகன்றுவிட்டது 


பொய்மையும் பொறாமையும் அனைவரின் 
உள்ளங்களை ஆட்கொண்டது வெறுப்பும் விரோதமும்,சுரண்டலும் 
இவ்வுலக மனிதர்களின் மதமானது 


விட்டுகொடுத்து ,பிறருக்கு உதவி  வாழும் பண்பு 
இவ்வுலகை விட்டு சென்றுவிட்டது 


அற்ப காரணங்களுக்காக ஒருவரோடொருவர் 
சண்டையிட்டு மாண்டு போகும்
போக்கு பெருகிவிட்டது 


இவ்வுலகத்தில் அமைதி நிலவ வேண்டும் 
வறுமையும் சிறுமையும் அகல வேண்டும் 


விருப்பும் வெறுப்பும் நம் உள்ளே இருக்கும் எதிரிகள் 
காமமும் சினமும் நம்மை புறத்தே தாக்கும் எதிரிகள் நம் இதயம் இறைவன் வாழும் இல்லம்
அதை அன்பால் நிறைந்தால் 
இவ்வுலக வாழ்வு இன்பம் .


அகந்தையை விட்டொழிப்போம் 
அனைவருடன் அன்பால் இணைந்து 
ஆனந்தமாய் வாழ்வோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக